Eggless Omelet Recipe: முட்டை இல்லாம ஆம்லெட் செய்வது எப்படி? இப்படித்தான் பண்ணனும்!
Eggless Omelet Recipe: முட்டை இல்லா ஆம்லெட் எப்படி செய்வது என்று விரிவாக கீழே காணலாம்.
ஆம்லெட் எல்லாருக்குமே மிகவும் பிடித்த, எளிமையாக செய்ய கூடியது டிஷ். ஒரு வேளை கூட ஆம்லெட் இல்லாம சாப்பிட முடியாது என்று சொல்பவர்கள் பலரும் உள்ளனர். ஆனால், நான் வீகன் -ஆக மாறிட்டேன். ரச சோறு ஆம்லெட், மீன் குழம்பு ஆம்லெட், பிரிஞ்சி ஆம்லெட், தோசை - ஆஃப் பாயில், புரோட்டா - ஒன் சைட் ஆம்லெட் என எல்லாத்துக்கும் ஆம்லெட் வேணும்.
சும்மா ஏதாவது சாப்பிட வேண்டும் என்றால் கூட தேங்காய் எண்ணெயில் ஆம்லெட் என ஆம்லெட் எப்போதும் இருக்க வேண்டும். சிலர் புரட்டாசி மாதம் அசைவம் சாப்பிடாம இருப்பதை கடைப்பிடிக்கும் பழக்கம் உண்டு. அவர்களுக்கு இது நல்ல பயனுள்ளதாக இருக்கும். சைவ உணவுகளை மட்டுமே சாப்டற பழக்கத்துக்கு வந்துட்டேன் என்று சொல்பவர்கள் முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்ய முடியுமா? என்று கேட்டால் முடியும் என்பதுதான் பதில். இதோ ரெசிபி.
தேவையான பொருட்கள்
கடலை மாவு - ஒரு கப்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்
பொடியாக நறுக்கிய தக்காளி - அரை கப்
குடை மிளகாய் பொடியாக நறுக்கியது - 1/4 கப்
துருவிய கேரட் - 1/2 கப்
மிளகாய் தூள் / மிளகு தூள் - 1 டீ ஸ்பூன்
சீரக தூள் - 1 டீ ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
கடலை மாவு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் தூள், சீரக தூள், உப்பு எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலக்கவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து தோசை கல் சூடானதும் அதில் அதில் இந்த கலவையை ஊற்றி எண்ணெய் ஊற்றி நன்றாக வெந்ததும் எடுத்து சுவைத்து சாப்பிடலாம்.
பட்டாணி அவல் உப்புமா
தேவையான பொருட்கள்
அவல் - 1 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது )
வேகவைத்த பச்சைப் பட்டாணி - ஒரு கப்
வேகவைத்த உருளைக் கிழங்கு - 2
கொத்தமல்லி - ஒரு கைப்பிடி அளவு
தாளிக்க:
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழை - சிறிதளவு
எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - தேவையான அளவு (எலுமிச்சை பழம் தேவையில்லையெனில் சேர்க்க வேண்டாம்.)
செய்முறை:
- அவலை நன்றாக சுத்தம் செய்து 15 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். அவலை பாலிலும் ஊற வைக்கலாம். சுவையாக இருக்கும்.
- சிறிது நேரம் கழித்து அவலை வடிக்கட்டவும்.
- கொத்தமல்லியை பச்சை மிளகாயுடன் சேர்த்தி மிக்ஸியில் அரைத்தெடுக்கவும்.
- கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு , பச்சை மிளகாய், மஞ்சள் தூள் கருவேப்பிலை ஆகியவற்றை தாளித்து கொள்ளவும். அதனுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதோடு கொத்தமல்லி விழுதைச் சேர்க்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- நன்றாக வதங்கிய பிறகு அதனுடன், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக் கிழங்கை சேர்க்கவும். நன்கு வதக்கிய பின், அவல் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
- 10 நிமிடங்கள் மூடி வைக்கவும். அடுப்பை சிம்மில் வைத்து விடுங்கள்.
- பிறகு, கொத்தமல்லி இலைகள் மேலே தூவி இறக்கவும்.
- சுவை கொத்தமல்லி, பட்டாணி அவல் ரெடி!
ஒரிஜினல் அவல் உப்புமாவிற்கு அவல் மேலே குறிப்பிட்ட பொருட்களுடன், வறுத்த நிலக்கடலை சேர்த்து செய்தால் அவ்வளவுதான்.