News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Eggs and Cholesterol : முட்டை சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவுகள் எகிறுமா? எத்தனை சாப்பிடணும்?

முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன. அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.. முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

FOLLOW US: 
Share:

முட்டை விலை குறைவான சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருள். அதனால்தான் பள்ளிகளில் சத்துணவு தொடங்கி பெரும் பணக்காரரின் காலை உணவு வரை எல்லாவற்றிலும் முட்டை இடம் பெற்றுள்ளது.

முட்டைகளில் உள்ள வைட்டமின் ஏ, வைட்டமின் பி -12 மற்றும் செலினியம் ஆகியவை நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

ஆனால், முட்டையை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால் டைப் 2 சர்க்கரை நோயை அதிகப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகவே, டைப் 2 சர்க்கரை நோயாளிகள் முட்டையை தவிர்ப்பது நல்லது என்றே பரிந்துரைக்கப்படுகிறது.

முட்டைகள் உடல் ஆரோக்கியத்துக்கு எப்போதும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவது தான். அதுமட்டுமல்லாமல் மிக எளிமையாக விதவிதமாக சமைக்கக்கூடியதும் கூட.  

இருப்பினும் சிலருக்கு முட்டையால் கெட்டக் கொழுப்பு அதிகரிக்குமோ என்ற சந்தேகம் இருக்கிறது. அண்மையில் மேற்கொள்ளப்பட ஆய்வுகள் பலவும் முட்டைக்கு இதயநாள நோய்களுக்கும் எந்தவிதமான உறுதிப்படுத்தப்பட்ட தொடர்பு இல்லை என்று தெரிவிக்கிறது. சிவிடி நோய் அபாயத்தை முட்டை ஏற்படுத்துவதாக உறுதியாகவில்லை என்று ஜஸ்டினா கோடோஸ் மற்றும் அவரது குழுவினர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதேபோல் ஒரு வாரத்திற்கு ஒரு சர்க்கரை நோயாளி 12 முட்டை சாப்பிட்டால் கூட அது அவரது ரத்த கொலஸ்ட்ராலில் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

முட்டைகளில் கூடுதல் ஊட்டச்சத்துக்களும் (MUFA மற்றும் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள்) உள்ளன. அவை இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவும்.. முட்டையில் புரதம் மற்றும் பல அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.
 
ஆகையால் முட்டையை தயக்கமின்றி சாப்பிடலாம். அதுவும் முட்டையை கீழே உள்ள ரெஸிபிக்களில் செய்து சாப்பிட்டால் அப்போது உடல் எடையைக் குறைக்கக் கூட செய்யலாம்.

குடைமிளகாய்: முட்டையுடன் பச்சை அல்லது மஞ்சள் நிற குடைமிளகாயை சேர்த்து சமைத்துச் சாப்பிடலாம். இதில் உள்ள வைட்டமின் சி, கொழுப்பைக் குறைக்கும். மேலும் இதை தினமும் உட்கொண்டால் உடல் எடை குறையும்.

மிளகு: முட்டையின் மீது மிளகைத் தூவுவதும் ஆரோக்கியமானதே. மிளகில் உள்ள பெப்பரைன் என்ற பொருள் நம் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவும்.

தேங்காய் எண்ணெய்: எல்லா வகையான கொழுப்பும் கெட்டவை அல்ல. சோயா எண்ணெய்யில் உள்ள கொழுப்பு உடல் எடையை அதிகரித்தால், தேங்காய் எண்ணெய்யில் உள்ள கொழுப்பு உடல் எடையைக் குறைக்க உதவும். எனவே அடுத்த முறை முட்டை சமைத்தால் அதைத் தேங்காய் எண்ணெய் ஊற்றி சமைத்துப் பாருங்கள். சுவையும், மனமும், பலனும் கூடுதலாக இருக்கும்.

ஆகையால் முட்டையுடன் இந்த உணவுப் பொருட்களையும் சேர்த்து சாப்பிட்டு உடல் எடையை எளிமையாக ஆரோக்கியமாக குறைக்க முயற்சிக்கலாமே. ஆரோக்கியமாக சாப்பிடுவோம். உடல் எடையை சீராக வைப்போம்.

Published at : 17 Feb 2023 06:13 PM (IST) Tags: eggs Blood Cholesterol Levels

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?