உணவை முகத்தில் தடவுவதால் சருமம் ஆரோக்கியமாகுமா? : திவ்யா சத்யராஜ் விளக்கம்
அவர் காலை 11:30 மணிக்கு பொன்னாங்கன்னி கீரை சூப் சாப்பிட வேண்டும் எனவும் மதியம் பரங்கிக்காய் சூப் எனவும் இரவுக்கு கேரட் சூப் சாப்பிடவும் பரிந்துரைக்கிறார்.
ஊட்டச்சத்து நிபுணரான திவ்யா சத்தியராஜ் அவ்வப்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஊட்டச்சத்து டிப்ஸ்களை பதிவேற்றுவது வழக்கம். அந்த வகையில் அவர் அண்மையில் சருமம் பளபளப்பாக இருக்க சில டிப்ஸ்களைப் பரிந்துரைத்துள்ளார். அதில் அவர் காலை 11:30 மணிக்கு பொன்னாங்கன்னி கீரை சூப் சாப்பிட வேண்டும் எனவும் மதியம் பரங்கிக்காய் சூப் எனவும் இரவுக்கு கேரட் சூப் சாப்பிடவும் பரிந்துரைக்கிறார். பொன்னாங்கன்னியில் உள்ள வைட்டமின் சி முகத்தைப் பளபளப்பாக வைக்கிறது என்கிறார் அவர். பரங்கிக்காயில் உள்ள துத்தநாகம் மற்றும் வைட்டமின் ஈ முகத்தில் உண்டாகும் பருக்களை நீக்கி அதனால் ஏற்படும் தழும்புகளையும் நீக்குகிறது.
View this post on Instagram
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்கள் முகத்தில் கருவளையத்தை நீக்குகிறது என்கிறார். மேலும், தனக்கு உணவுப் பொருட்களை நம் முகத்தில் தடவுவதில் மாற்றம் உண்டாகும் என்கிற நம்பிக்கை இல்லை என்றும் தன் நோயாளிகளில் சிலருக்கு சுண்ணாம்பு, ஆரஞ்சு மற்றும் தேனைப் பயன்படுத்திய பிறகு ஒவ்வாமை ஏற்பட்டது. அதனை முகத்தில் தடவப் பயன்படுத்துவதற்கு முன், தகுதிவாய்ந்த தோல் மருத்துவரை அணுகவும். சரும ஆரோக்கியத்தை அதிகரிக்க சரியாக சாப்பிடவும் பரிந்துரைக்கிறார். நாம் யார் என்பதை நம் உணவுதான் தீர்மானிக்கிறது என்கிறார் அவர்.
அவரது பிற ஊட்டச்சத்து அறிவுரைகளுக்கு....
View this post on Instagram