Coconut Poli : தேங்காய் போளி ட்ரெண்டிங்.. இன்ஸ்டா ரீல்ஸில் பின்னி பெடலெடுக்கும் ரெசிப்பி
தேங்காய் போலியை நாம் கடைகளில் வாங்கி சுவைத்திருபோம். வீட்டிலேயே ஈசியான முறையில் தேங்காய் போலி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
பொதுவாக போலி எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் தேங்காய் போலியென்றால் கூட இரண்டு போலிகளை அதிகமாகவே சாப்பிடுவோம். போலி சாப்பிட ஆசைப்படும்போது இதற்காக நாம் கடைக்கு செல்ல வேண்டியதில்லை. வீட்டிலேயே எளிமையான முறையில் சுவையாக போலியை செய்ய முடியும். வாங்க போலி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை அல்லது கோதுமை மாவு - 2 கப் ,தேங்காய்த்துருவல் - 1 கப், வெல்லம் பொடித்தது - 1 கப், சுக்குப்பொடி - 1/2 டீஸ்பூன், ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன், நெய் - சுவைக்கேற்ப, நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன் வரை, மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, உப்பு - 1/2 டீஸ்பூன்.
செய்முறை
கோதுமை (அல்லது மைதா) மாவுடன், உப்பு, மஞ்சள் தூள், நெய் சேர்த்து, சிறிது சிறிதாக நீரைச் சேர்த்து, சப்பாத்திக்கு பிசைவதுபோல் நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். அதன் மேல் சிறிது நல்லெண்ணெயைத் தடவி, குறைந்தது அரை மணிநேரம் மூடி வைக்கவும்.
வெல்லத்தில் 1/4 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு, வடிகட்டிக்கொள்ள வேண்டும். வடிகட்டிய வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்க விட்டு அத்துடன் தேங்காய்த்துருவலைச் சேர்த்து கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். பின்னர் அத்துடன் சுக்குத்தூள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி, இறக்கி ஆற விடவும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
வாழை இலையில் அல்லது பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி தடவி, அதில் எலுமிச்சை பழ அளவு மாவை வைத்து பூரி வடிவில் தட்டி, அதன் மேல் எலுமிச்சம் பழ அளவு தேங்காய் பூரணத்தை வைத்து மூடி, மறுபடியும் பிளாஸ்டிக் ஷீட்டில் சிறிது நெய் தடவி மாவை வைத்து விரல்களால் சப்பாத்தி போல் தட்டி, தோசைக்கல்லில் போட்டு, அதை சுற்றி சிறிது நெய்யை ஊற்றி, இரு புறமும் சிவக்க வேகவைத்து எடுக்க வேண்டும்.
(போலி பெரும்பாலும் மைதா மாவில்தான் செய்வார்கள். ஆனால், கோதுமை மாவிலும் செய்யலாம். இதேபோன்று, கடலைப்பருப்பு பூரணத்தை வைத்து, பருப்பு போளியும் செய்யலாம். கைகளால் தட்ட சிரமமாயிருந்தால், சப்பாத்தி கட்டையால் சப்பாத்தி இடுவது போல் இடலாம். நெய்யுடன் இந்த தேங்காய் போளியை தொட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.)
மேலும் படிக்க,