Cheese Mysore Masala Dosa: சுவையான சீஸ் மைசூர் மாசல் தோசை எப்படி செய்வது?
சுவையான சீஸ் மைசூர் மாசல் தோசை எப்படி செய்வதென்று கீழே பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மாவுக்கு:
2 கப் அரிசி,1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 3 தேக்கரண்டி கொண்டைக்க1 தேக்கரண்டி வெந்தயம், உப்பு -சுவைக்கேற்ப
ஆலு மசாலாவிற்கு:
1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1 சிறிய வெங்காயம் நறுக்கியது, 2 பச்சை மிளகாய் கீறியது. 2 உருளைக்கிழங்கு வேக வைத்து ஸ்மாஷ் செய்தது, 1 தேக்கரண்டிவெந்தயம், 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், 1/2 தேக்கரண்டி உளுத்தம் பருப்பு, 1/2 தேக்கரண்டி கொண்டைக்கடலை, 1/2 இஞ்சி நறுக்கியது, கறிவேப்பிலை 1 கொத்து, உபபு சுவைக்கேற்ப.
மைசூர் மசாலாவிற்கு:
2-3 தேக்கரண்டி வெண்ணெய், 2 டீஸ்பூன் வெங்காயம் நறுக்கியது, 2 டீஸ்பூன் குடைமிளகாய் நறுக்கியது, 2 டீஸ்பூன் கேரட் துருவியது,1 தேக்கரண்டி சிவப்பு மிளகாய் தூள், 1/2 தக்காளி நறுக்கியது, 2 தேக்கரண்டி பாவ் பாஜி மசாலா, உப்பு சுவைக்கேற்ப, பதப்படுத்தப்பட்ட சீஸ் துருவியது (தேவைக்கேற்ப).
செய்முறை
1. முதலில் அரிசி மற்றும் பருப்பை நன்றாக கழுவி அவற்றை வெந்தயத்துடன் சேர்த்து தண்ணீரில் 3-4 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி ஊறியதும், தண்ணீரை வடிகட்டி, ஒரு மிக்சி ஜாருக்கு மாறி மென்மையான பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி, கிண்ணத்தை ஒரு துணியால் மூடி, சிறிது நேரம் புளிக்க வைக்கவும்.
2.ஆலு மசாலா தயார் செய்ய, ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்க வேண்டும். உளுத்தம்பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் வெந்தய விதைகளை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்கு கிளறி விட வேண்டும்.
3.மைசூர் மசாலாவிற்கு, ஒரு கடாயில் வெண்ணெய்யை சூடாக்கி வெங்காயம் சேர்க்கவும். ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் வதக்கி, பின்னர் அனைத்து காய்கறிகளையும் சிவப்பு மிளகாய் தூள், பாவ் பாஜி மசாலா மற்றும் உப்பு சேர்த்து சேர்க்க வேண்டும். இதை 2-3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
4.மைசூர் மசாலாவுடன் ஆலு மசாலாவை சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு தவாவை மிதமான தீயில் சூடாக்கி அதன் மீது சிறிது தண்ணீர் தெளிக்க வேண்டும். ஒரு டம்ளர் மாவை தவாவில் ஊற்றி இருபுறமும் திருப்பி போட்டு வேக வைக்க வேண்டும்.
5.தயார் செய்யப்பட்ட ஆலு-மைசூர் மசாலாவை சிவப்பு சட்னியுடன் மையத்தில் பரப்பி, அதன் மேல் துருவிய சீஸைத் தூவவும். மீண்டும் ஒருமுறை தோசையை மடித்து வேக வைக்க வேண்டும். இப்போது தோசையை சூடாக சாம்பார் அல்லது சட்னி உடன் பறிமாறலாம்.
மேலும் படிக்க
Mohammed Shami: பேட்ஸ்மேன்களை அச்சுறுத்தும் ஆயுதம்! இந்திய அணியின் எல்லைச்சாமியான முகமது ஷமி!