Cabbage vada recipe :முட்டைக்கோஸ் வடை..வெறும் 5 நிமிடங்களில் எப்படி செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க
சுவையான முட்டைக்கோஸ் வடை வெறும் 5 நிமிடங்க்களில் எப்படி செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க.
ஸ்நாக்ஸ் என்றால் பொதுவாக எல்லோருக்குமே பிடிக்கும். அதுவும் வீட்டில் தயார் செய்தது என்றால் நிச்சயம் அதன் சுவை சற்று தூக்கலாகத்தான் இருக்கும். மழை நேரங்கள், வெறுமையான பொழுதுகள் என பல்வேறு நேரங்களில் நாம் ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவோம். அதுவும் அந்த ஸ்நாக்சை வெறும் ஐந்து நிமிடத்தில் வீட்டில் இருக்கும் ஒரு சில பொருட்களை மட்டுமே வைத்து செய்து விட முடியும் என்றால் நிச்சயம் ட்ரை பன்னலாம் தானே. அப்படி ஒரு எளிமையான முட்டைக்கோஸ் வடை எப்படி செய்யுறதுனுதான் இப்போ பார்க்க போறோம்.
தேவையான பொருட்கள்
முட்டைக்கோஸ் கால் கிலோ
வெங்காயம் 1 பெரியது
கடலை மாவு 4 டேபிள் ஸ்பூன்
ஒரு கைப்பிடி மல்லித்தழை
உப்பு தேவையான அளவு
பெருங்காயத்தூள் சிறிதளவு
சீரகம் அரை டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
செய்முறை
முட்டைக்கோசை பெரிய துண்டுகளாக நறுக்கி, அதனை தண்ணீரில் கழுவிக்கொள்ள வேண்டும். பின் அவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி, அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்க வேண்டும். பின் 4 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, கொத்தமல்லித்தழை, நறுக்கிய பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும்.
தேவையான அளவு உப்பு, சிறிதளவு பெருங்காயத்தூள், அரை டேபிள் ஸ்பூன் சீரகம் ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். முட்டைக்கோசில் தண்ணீர் இருக்கும் என்பதால் தண்ணீர் சேர்க்கத் தேவையில்லை.
ஒரு வானலில் எண்ணெய் வைத்து. எண்ணெய் சூடானதும் பிசைந்து வைத்த மாவை சிறு சிறு வடைகளாக தட்டிப்போட வேண்டும். அவ்வளவு தான் சூடான முட்டைக்கோஸ் வடை தயார்.
சிலர் உணவு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பர். எண்ணெயில் பொரித்த உணவுகளை கடைகளில் இருந்து வாங்கி சாப்பிட விரும்ப மாட்டார்கள். நீங்கள் அப்படிப்பட்டவராக இருந்தால். வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த எளிமையான முட்டைக்கோஸ் வடை உங்களுக்கு மிகவும் சிறந்த சாய்ஸ்.
மேலும் படிக்க,