அவித்த முட்டை vs ஆம்லெட்.. காலை உணவில் தினந்தோறும் முட்டை பயன்படுத்தும் மக்களா நீங்கள்...! எது சிறந்த உணவு?
ஆம்லெட் ஆரோக்கியமானது என்று சிலர் வாதிடுகையில், வேகவைத்த முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறுகிறார்கள்.
நீண்ட காலமாக வேலைக்கு செல்லும் மக்கள் ஏதாவது ஒன்றை காலையில் அவரசமாக சாப்பிட தங்கள் காலை உணவில் முட்டைகளை எடுத்துக்கொள்கின்றனர். முட்டை சுவையானது மட்டுமின்றி ஆரோக்கியமானதாகவும் கருதப்படுகிறது. இதில், வைட்டமின்கள், இரும்புச்சத்துகள் மற்றும் புரதம் என பல்வேறு உடல்சார்ந்த நல்ல விஷயங்கள் அடங்கி இருக்கின்றன. ஆனால் இன்றுவரை ஆம்லெட் அல்லது வேகவைத்த முட்டை என இந்த இரண்டும் மிகவும் ஆரோக்கியமானதா என்ற கேள்வி எழுந்து விவாதமாக நடைபெற்று வருகிறது. ஆம்லெட் ஆரோக்கியமானது என்று சிலர் வாதிடுகையில், வேகவைத்த முட்டை மிகவும் ஆரோக்கியமானது என்று சிலர் கூறுகிறார்கள். இன்று இந்த கட்டுரையின் மூலம் இந்த விஷயத்தை கண்டுபிடிக்க முயற்சிப்போம்.
அவித்த முட்டைகள்:
அவித்த அல்லது வேகவைத்த முட்டைகள் ஒரு எளிய காலை உணவாகும். இதை தயார் செய்ய பெரியளவில் நேரமும் எடுக்காது. முட்டையை உண்ண வேண்டும் என்றால், இதை உடனடியான தயார் செய்து ஆரோக்கியமாக சாப்பிடலாம். வேகவைத்த முட்டையில் காணப்படும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள் பின்வருமாறு.
புரதம் : புரதத்தின் சிறந்த ஆதாரமாக எப்போதும் கருதப்படுவது முட்டை. ஒரு பெரிய வேகவைத்த முட்டையில் சுமார் 6 கிராம் உயர்தர புரதம் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இது ஒருவரின் உணவில் அதிக புரதம் தேவைப்படுபவர்களுக்கு சிறந்த உணவாகவும் உள்ளது.
வைட்டமின் டி: பல நல்ல ஊட்டச்சத்துகளில் ஒன்றான வைட்டமின் டி அதிகளவில் அவித்த முட்டைகளில் உள்ளது. ஒரு வேகவைத்த முட்டையில் சுமார் 6% வைட்டமின் டி உள்ளது என்று அதிகாரப்பூர்வ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக அறிஞர்கள் தெரிவிக்கின்றன.
கோலின் : அவிட்ட முட்டைகளில் கோலின் ஒரு சிறந்த ஊட்டச்சத்து இருக்கிறது. இது மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டிற்கு அவசியமான ஒரு ஊட்டச்சத்து ஆகும்.
லுடீன் மற்றும் ஜியாக்சாண்டின்: இந்த இரண்டு வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் முட்டையின் மஞ்சள் கருவில் காணப்படுகின்றன. இது கண் ஆரோக்கியத்திற்கு அவசியமாக தேவைப்படும் மூலப்பொருளாகும். இது உட்கொள்ள படுவதால் கண்பார்வை மேம்படும்.
ஆம்லெட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்- காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள்
காலை உணவாக ஆம்லெட் சாப்பிடுவது மிகவும் பிரபலமானது மற்றும் வெளிநாட்டவர்கள் அதிகளவில் இதையே காலை உணவாக எடுத்துக்கொள்கிறார்கள். தற்போது இந்த நடைமுறை இந்தியாவிலும் அதிகளவில் காணப்படுகிறது. மக்கள் பெரும்பாலும் காலை உணவாக ஆம்லெட் சாப்பிட சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமாகவும் இருக்கிறது. நிறைய காய்கறிகள், இறைச்சி மற்றும் பிற பொருட்களைச் சேர்ப்பது போன்ற பல்வேறு வழிகளில் ஆம்லெட்டை நீங்கள் செய்யலாம்.
ஆம்லெட்டில் காணப்படும் சில முக்கிய ஊட்டச்சத்துக்கள்:
நார்ச்சத்து: காய்கறிகளால் தயாரிக்கப்படும் ஆம்லெட்டுகள் நார்ச்சத்துக்கான சிறந்த காரணியாகும். நீங்கள் எடுத்துகொள்ளும் உணவை செரிமான செய்ய நார்ச்சத்து அவசியம். மேலும் இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் உதவும்.
இரும்பு: இரும்புச் சத்து உடலுக்கு ஒரு அத்தியாவசிய கனிமமாகும். இது இரத்த சிவப்பணுக்களை உடலில் அதிகளவில் உருவாக்க உதவுகிறது. உடல் முழுவதும் ஆக்ஸிஜன் சரியான ஓட்டத்திற்கு உதவுகிறது. மேலும், இரும்புச்சத்துக்கான நல்ல ஆதாரமாக பார்க்கப்படும் கீரையுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட்டுகள் உங்கள் இரும்பு அளவை அதிகரிக்க உதவும்.
வைட்டமின் சி: காய்கறியுடன் தயாரிக்கப்படும் ஆம்லெட் வைட்டமின் சி-ஐ அதிகளவில் தருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த மிகவும் முக்கியமானது. வைட்டமின் சி ஒரு ஆக்ஸிஜனேற்றியாகவும் செயல்படுகிறது.
ஆரோக்கியமான கொழுப்பு:
முட்டையில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இவை மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் ஆகும். அவை இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆம்லெட்டில் காணப்படும் இந்த ஆரோக்கியமான கொழுப்புகள் இதய நோய் அபாயத்தைக் குறைக்க உதவும்.
உங்கள் ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது?
வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட் இரண்டும் ஊட்டச்சத்து நன்மைகளின் சிறந்த ஆதாரமாகும். உங்கள் உணவில் புரதத்தின் அளவை அதிகரிக்க விரும்பினால், உங்கள் காலை உணவுக்கு வேகவைத்த முட்டை ஒரு சிறந்த வழி. பலவிதமான சத்துக்கள் நிறைந்த சத்தான காலை உணவை நீங்கள் விரும்பினால், ஆம்லெட் சாப்பிடலாம்.
பொறுப்புத் துறப்பு: இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகள் மற்றும் பரிந்துரைகளை செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து ஒரு மருத்துவர் அல்லது தொடர்புடைய நிபுணரை அணுகவும்.