மேலும் அறிய
Advertisement
Tomato Price: மதுரையிலும் தாறுமாறாய் உயர்ந்த விலை.. 150 ரூபாய் தொட்டு தூங்காநகர மக்களை தூங்கவிடாமல் செய்த தக்காளி..!
அதேபோல நேற்று 2-ம் ரக தக்காளி ஒருகிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மதுரையில் காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 150ரூபாய்க்கு விற்பனை- சில்லரை விற்பனை கடைகளில் 160ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் விளைச்சல் பாதிப்பு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தக்காளியின் வரத்து குறைவு மற்றும் அண்டை மாநிலங்களில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக தமிழ்நாட்டில் தக்காளியின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மதுரையில் காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 150ரூபாய்க்கு விற்பனை- சில்லரை விற்பனை கடைகளில் 160ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் சாமானிய மக்கள் கவலை அடைந்துள்ளனர்.#madurai | @SRajaJourno | @abpnadu | @ClubStarwi4493 @LPRABHAKARANPR3 | @annamalai_k | #market | @JeeVaigai ... pic.twitter.com/9mBW95Mi97
— arunchinna (@arunreporter92) July 30, 2023
தொடர்ந்து கடந்த பல வாரங்களாகவே தக்காளியின் விலை 100 ரூபாய்க்கு மேல் விற்கப்பட்டு வரும் நிலையில் நேற்றைய தினம் ஒரு கிலோ தக்காளி 130வது ரூபாய் என விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மதுரையில் காய்கறி சந்தைகளில் ஒரு கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 2-ம் ரக தக்காளி 130 ரூபாய்க்கும், 15 கிலோ கொண்ட தக்காளி பெட்டியின் விலை 1000 ரூபாய்-2000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினம் ஒரு கிலோ தக்காளி 130 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இன்று ஒரே நாளில் 20 ரூபாய் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல நேற்று 2-ம் ரக தக்காளி ஒருகிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் தொடர் விலை உயர்வு காரணமாக இல்லத்தரசிகள், சாமானியர்கள், பொதுமக்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். ஆடி மாதம் தக்காளியின் விலை குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடர்ந்து விலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல கத்தரிக்காய் 50 ரூபாய் , வெண்டைக்காய் 40 ரூபாய் , கேரட்- 50 - 70 ரூபாய், பாவைக்காய் 40, 60 ரூபாய், புடலங்காய் 30 ரூபாய், பீன்ஸ் 100,120 ரூபாய், சின்ன வெங்காயம் ,60,90 ரூபாய், பெரிய வெங்காயம் 15,30 ரூபாய், இஞ்சி புதியது 130,160 ரூபாய் பழைய இஞ்சி 260 ரூபாய், உருளைங்கிழங்கு 50 ரூபாய், பீட்ரூட் 50 ரூபாய், முருங்கை 35ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - Vegetables Price: அச்சுறுத்தும் தக்காளி.. அதிரடி ஏற்றம்.. இன்றைய காய்கறி விலை நிலவரம் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
உலகம்
கிரிக்கெட்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion