Ayurveda Tips : நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் மூலிகை பொருட்கள் எவை?
மூலிகை பொருட்கள் ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
பொதுவாகவே தெற்காசிய நாடுகளில் அதிகளவான மூலிகை பொருட்கள் உணவுகளில் சேர்க்கப்படுகின்றன .குறிப்பாக இஞ்சி, சீரகம். மஞ்சள் ,வெள்ளைப் பூண்டு, புதினா ,லவங்கம், கிராம்பு, ஏலக்காய், சீரகம் ,மிளகு , கறிவேப்பிலை ,ரம்பை ,மஞ்சள் என இவ்வாறு நாம் இந்த மூலிகை மசாலா பொருட்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.
மூலிகை பொருட்கள்:
அதிலும் அதிகளவான சமையல் மூலிகை பொருட்கள் இந்தியா சீனா, இலங்கை போன்ற நாடுகளில் உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றன. சமையலில் மசாலா பொருட்களாக இவை சேர்க்கப்பட்டாலும் ஒவ்வொரு பொருட்களுக்கும் தனித்துவமான மருத்துவ குணங்கள் உள்ளதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது .
ஆகவே இந்த சமையலில் சேர்க்கப்படும் மசாலா மூலிகைப் பொருட்களை சாப்பிடும் போது, அவை என்னென்ன நோய்களுக்கு தீர்வாக அமைகிறது என்பதை பார்க்கலாம்.
ஆரம்ப காலங்களில் நம் முன்னோர்கள் இந்த மசாலா மற்றும் மூலிகை பொருட்களை, மாய மந்திர பொருட்கள் என அழைத்துள்ளார்கள். இந்த மூலிகை பொருட்கள் நமது ஆரோக்கியத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து. ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றன.
நீரிழிவு, ரத்த அழுத்தம்:
நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக்கொள்ளப்படும் இந்த மூலிகை பொருட்கள் மனித குலத்தை தற்போது வாட்டி வதைத்து கொண்டிருக்கும் நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தற்போதைய மோசமான வாழ்க்கை முறை ,முறையற்ற உணவு பழக்க வழக்கங்கள், ஊட்டச்சத்து உணவுகளை எடுத்துக் கொள்ளாமை, நேரத்துக்கு உணவின்மை போன்ற வாழ்க்கை முறை கோளாறுகளால் நீரழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உருவாகின்றன. ஒரு மனிதனுக்கு ஏற்படும் நீரழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தத்திற்கு சரியான முறையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் பல்வேறு பெரு நோய்கள் ஏற்பட வழி வகுப்பதாக கூறப்படுகிறது. பக்கவாதம், பார்வைக் குறைபாடு, மாரடைப்பு, சிறுநீரக பாதிப்பு, இதயச் செயலிழப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை இந்த நீரழிவு உயர் ரத்த அழுத்தம் போன்ற உருவாக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்
இரத்த அழுத்தம் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்றுவது இன்றியமையாதது. இரண்டு உடல்நலப் பிரச்சினைகளையும் குணப்படுத்தும் மூலிகை மருந்து பொருட்கள் என்னவென்று நாம் பார்க்கலாம்.
துளசி:
துளசி ஒரு புனித பொருளாகவும் ஒரு மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. துளசி மனித உடலில் ஏற்படும்,வளர்சிதை மாற்றத்தை எதிர்த்துப் போராடுகிறது . அதேபோல் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு, இரத்த அழுத்தம் போன்றவற்றை குறைத்து கட்டுக்குள் வைத்திருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்திருக்கிறது. மேலும் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிப்பை கட்டுப்படுத்தும் துளசி உளவியல் ரீதியிலான அழுத்தங்களை நீக்குவதாக கூறப்படுகிறது. அதனால்தான் கோவில்களிலும் புனித பொருளாக பயன்படுத்தப்படும் துளசி பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.
துளசியில் காணப்படும் யூஜெனால் என்ற மூலக்கூறு, இரத்த நாளங்களைச் சுருக்கி இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்கிறது அதேபோல் உடலில் அதிக அளவில் உள்ள ரசாயன மாற்றங்களை சரி செய்கிறது . ஆகவே நீரழிவு ,உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டோர் ஒரு கைப்பிடி அளவு, துளசி இலைகளை மென்று சாப்பிட்டு வர நோய் கட்டுக்குள் இருக்கும். இந்த துளசி இலைகளை மென்று சாப்பிட முடியாவிட்டால் தேநீர் தயாரிக்கும் போது அதில் துளசி இலைகளை சேர்த்து அருந்தலாம்.
இலவங்கப்பட்டை:
இந்திய மக்களால் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மசாலா பொருள்தான் இந்த இலவங்கப்பட்டை.
இது கேக்குகள் மற்றும் கறிக் குழம்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களில் அதிகளவாக பயன்படுத்தப்படுகிறது. இந்திய மசாலாவான இலவங்கப்பட்டை இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் பெரும் பங்காற்றுவதாக கூறப்படுகிறது. வைரஸ், பாக்டீரியா தொற்று மற்றும் பூஞ்சை நோய் போன்றவற்றை இந்த இலவங்கப்பட்டை எதிர்த்து செயலாற்றுகிறது. இந்த இலவங்கப்பட்டை அதிகளவான ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் அழற்சி எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எண்ணிலடங்காத மருத்துவ பண்புகளைக் கொண்டுள்ள இந்த இலவங்கப்பட்டை டைப் 2 நீரிழிவு நோய் அபாயத்தைக் குறப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வெந்தயம்:
நமது அன்றாட சமையலில் சேர்த்துக் கொள்ளப்படும் வெந்தயமானது உடலில் நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கிறது. 10 கிராம் ஊறவைத்த வெந்தய விதைகளை வாரத்தில் இரு நாட்கள் உட்கொண்டு வரும் பட்சத்தில் டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.
மஞ்சள்:
பொதுவாகவே மஞ்சளில் உடலில் ஏற்படும் வெளிக்காயங்கள் முதல் உள் காயங்கள் வரை அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் பண்பு அதிக அளவில் இருப்பது யாவரும் அறிந்த உண்மையே.
மசாலா பொருளான மஞ்சளின் மகிமையை கடந்த கொரோனா காலங்களில் எல்லோரும் அறிந்திருப்பார்கள். உலக நாடுகள் இந்த மஞ்சளை அதிக அளவில் கொள்வனவு செய்து கொரோனா தொற்றிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொண்டனர் என்பதை யாரும் மறுக்க முடியாது.
மஞ்சளில் குர்குமின் என்ற வேதிப்பொருள் உள்ளது, இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாகும், இது ஒரு ஆன்டிபயாட்டிக் ஆகவும் செயல்படுகிறது. இந்த மஞ்சள் நீரழிவு நோயை கட்டுக்குள் வைக்கும் என கூறப்படுகிறது. அதிகளவான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ள இந்த மஞ்சளை அன்றாட சமையல் மற்றும் அருந்தும் பாலில் சேர்த்து உட்கொண்டு வரும் பட்சத்தில் உடலில் நோய்கள் நெருங்காது.
பூண்டு:
பூண்டு உணவில் சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. பூண்டு உடலில் நைட்ரிக் ஆக்சைடு அளவை அதிகரித்து இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கும் என கூறப்படுகிறது . இது உடலில் உள்ள இரத்த நாளங்களை தளர்த்தி விரிவுபடுத்துவதால் இரத்த அழுத்தம் சீர் செய்யப்படுகிறது. இதனால் உடலில் ஏற்படும் ரத்த அழுத்தத்தை பூண்டு கட்டுக்குள் வைத்திருக்கிறது.