மேலும் அறிய

Hair Tips: முடி வளர்ச்சியின்மை நோய்க்கான காரணம் என்ன? சரி செய்வது எப்படி? பார்க்கலாம் வாங்க!

Uncombable hair syndrome எனப்படும் சீப்பை கொண்டு சீவமுடியா அமைப்பை கொண்ட முடி வளர்ச்சியின்மை நோய் (UHS), மரபணு குறைபாட்டினால் ஏற்படுகிறது.

ஒரு மனிதரை வயது முதிர்ந்ததாகவோ அல்லது இளைஞராகவோ காண்பிப்பதில் அவருடைய முடிக்கு மிகப்பெரிய பங்களிப்பு இருக்கிறது இளம் வயதில் முடி இழப்பை சந்திக்கும் நபர்களை பார்க்கும்போது வயதானவரை போன்று தோற்றம் ஏற்படுகிறது. அதே நேரத்தில் வயதானவர்களுக்கு முடி நிறை இருந்து கருமையாக இருக்கும் போது அவரது வயதை குறைத்து சொல்ல தோன்றுகிறது.

இப்படியாக மனிதனை அழகுபடுத்தி காண்பிக்கும் முடியானது நமது அன்றாட வாழ்க்கை முறை, மரபணு கோளாறு, ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவற்றினால் இழப்புக்கு உள்ளாகிறது. அதிக தூசி அதிகப்படியான வெப்பம் மற்றும் தலையில் எண்ணெய் பசை இல்லாமல் இருப்பது போன்றவற்றாலும் முடி இழப்பு முடி கொட்டுதல் ஆகிய பிரச்சினைகளை  சந்தித்து வருகிறோம்.

இதே போல மரபணு குறைபாடினால் முடி வளர்ச்சியில் சில பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகையில் Uncombable hair syndrome எனப்படும் சீப்பை கொண்டு சீவமுடியா அமைப்பை கொண்ட முடியின் வளர்ச்சியின்மை நோய்(UHS), மரபணு குறைபாட்டினால் ஏற்படுகிறது. இந்த குறைபாடு உடையவர்களுக்கு முடியானது பொன்னிறமாகவோ, அல்லது வைக்கோல் நிறத்திலோ, வெள்ளிக் கம்பி இருப்பதை போன்று இருக்கும். மேலும் முடியாதது கீழ்நோக்கி வளராமல் அதன் போக்கில் எந்த திசையில் வேண்டுமானாலும் வளரும். யூ எச் எஸ் எனப்படும் இந்த மரபணு குறைபாட்டின் காரணமாக, முடியின் தண்டு வடிவம் மாறுகிறது. ஒரு உருளை வடிவத்திற்கு பதிலாக, இது ஒரு முக்கோண, இதயம் போன்ற அல்லது தட்டையான குறுக்குவெட்டைக் கொண்டுள்ளது.சில நேரங்களில் இந்த ஒழுங்கற்ற வடிவங்கள் அனைத்தும் முடியின் ஒரு இழையின் நீளத்தில் ஏற்படுகிறது.

இதில் 50 முதல் 100 சதவீத முடிகள் ஒழுங்கற்ற வடிவத்தில் இருக்கும். அசாதாரண முடி,சாதாரண முடியை விட வித்தியாசமாக ஒளியை பிரதிபலிக்கிறது. மேலும் அதிகப்படியான பளபளப்பைக் கொடுக்கிறது. UHS நோயானது 2 வயது முதல் 11 வயது வரையிலும் ஏற்படுகிறது.மேலும் வயது ஆக ஆக நோயின் தன்மை மாறுபடுகிறது. இத்தகைய பிரச்சினைகள் இருப்பவர்களுக்கு சீப்பு கொண்டு சீவ முடியாத நிலை ஏற்படுகிறது.

குழந்தை வளரும் காலத்தில் ஆட்டோசோமால் ரீசீசிவ் இன்ஹெரிடன்ஸ் மூலம் மரபணுக்களைப் பெறுகிறது. பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு சில நேரங்களில் இந்த மரபணு குறைபாடு வரலாம்.இதனால் முடி வளர்ச்சி ஆனது மிக மெதுவாகவும் அடர்த்தியில்லாமலும் இருக்கும். மேலும் சிலருக்கு முடி உடையும்  பிரச்சினை இருக்கும். இந்த பிரச்சனையை சரி செய்வதற்கு, பயோட்டின் புரதமானது மாற்றாக தரப்படுகிறது.மேலும் இத்தகைய முடியை கொண்டிருப்பவர்கள் முடியை முரட்டுத்தனமாகவும் வேகமாகவும் சீப்பை பயன்படுத்தி வரக்கூடாது இதைப் போலவே ஹீட்டரை கொண்டு முடியை சூடு படுத்தக் கூடாது. அதிகப்படியான ரசாயனங்கள் கலந்து இருக்கும் கிரீம்களை பயன்படுத்தக் கூடாது இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ரசாயன கலப்பில்லாத ஷாம்புகளை பயன்படுத்த வேண்டும். மேலும் தலையில் எண்ணெய் பசை எப்போதும் இருக்கும் படி பார்த்துக் கொள்வதும் ஓரளவுக்கு இந்த முடியை ஒழுங்குப்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். மேலும் யூ எச் எஸ் குறைபாடு உள்ளவர்கள் தங்கள் முடிக்கு பயன்படுத்த தேங்காய் எண்ணெயுடன், செம்பருத்தி,வெந்தயம்,மருதாணி மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றின் சாறு கலந்த எண்ணையை பயன்படுத்தலாம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget