மேலும் அறிய

Valentines Day: காதலர் தினத்தில் என்ன கிப்ட் கொடுக்குறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க..!

பத்து விதமான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களுக்கான பரிசுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, பரிசை பெறப்போகும் நபரைப்பற்றி தெரிந்து, அவர்களுக்கு ஏற்ற பரிசை அளித்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்!

இளைஞர்கள் மிகவும் எதிர்பார்த்த வேலன்டைன்ஸ் டே எனப்படும், காதலர் தினம் வந்துவிட்டது! இந்த கொண்டாட்டம் ஒரு வாரம் முன்பே களைகட்ட ஆரம்பித்து இன்றைய நாளில் வந்து முடியும். இந்த நாளை முன்னிட்டு சென்னையில் மால்கள், மற்றும் பொது இடங்கள் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உலக அளவில் எல்லா நகரங்களும் காதலை கொண்டாட தயாராகி விட்டனர்.

இந்த நாளில், காதல் ஜோடிகள், தம்பதிகள் மகிழ்வுடன் ஒருவருக்கொருவர் தங்கள் அன்பை வெவ்வேறு வழிகளில் பகிர்ந்து கொள்கின்றனர். அதில் முக்கியமான வழி பரிசுகள் பகிர்ந்து கொள்வது. ஆனால் பலருக்கு என்ன பரிசு கொடுப்பது என்பதில் பெரும் சந்தேகம் இருக்கும். பொதுவாக பரிசுகளை பரிந்துரைப்பது என்பது உங்களுக்கு கடினமாக இருக்கும், ஆனால் பரிசை பெறப்போகும் நபரைப்பற்றி உங்களுக்கு அதிகம் தெரியும் அல்லவா, இங்கு பத்து விதமான குணாதிசயங்கள் கொண்ட மனிதர்களுக்கான பரிசுகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது, உங்கள் மனதிற்கு பிடித்தவர் இதில் இருக்கிறாரா என்று பார்த்து அவர்களுக்கு அந்த பரிசை அளித்து சர்ப்ரைஸ் செய்யுங்கள்!

பயணங்களை விரும்புபவர் 

அதிகமாக பயணம் செய்பவர்களுக்கு பொதுவாக எளிதாக தூக்கி செல்ல முடிந்த பேக், காடு, மலைகளில் நடக்க ஏதுவான ஷூ, கையுரைகள், கொடுக்கலாம். ஆனால் அடிக்கடி பயணம் செய்பவர்களிடம் இதெல்லாம் ஏற்கனவே இருக்க என்பதால் கொஞ்சம் வேறு மாதிரி சிந்திக்க வேண்டும். பயணம் செல்வதற்கான எல்லாம் அவரிடம் இருக்கலாம், ஆனால் ஒரு பயணப் பிரியரின் வீட்டில் இருக்க வேண்டியவை எல்லாம் அவரிடம் இல்லாமல் இருக்கும். பயணம் சம்மந்தப்பட்ட, வீட்டை அலங்கரிக்கும் பொருட்களான, உலக மேப் சுவர் ஸ்டிக்கர், டிராவல் டிசைன் டைரி, டிராவல் டிசைன் டி-ஷர்ட், கேமராவின் லென்ஸ் போலவே தோற்றமளிக்கும் காபி மக் என இன்னும் இன்னும் ஸ்வாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. 

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Valentines Day: காதலர் தினத்தில் என்ன கிப்ட் கொடுக்குறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க..!

ஒயின் பிரியர்

ஒயின் பிரியர்கள் என்பவர்கள் எப்போதுமே மது அருந்துபவர்கள் இல்லை. அழகுணர்வுடன் எப்போதாவது ஒரு அழகிய மாலை வேளையில் சரியாக ஒரு 30 ml எடுத்து அழகான கிளாசில் ஊற்றி, இரண்டு ஐஸ் க்யூப்களை போட்டு குடிப்பவர்களாக இருக்கலாம். அவர்களுக்கு, அழகான கிளாஸ், அதனை 30 ml என்று அளப்பதற்கு தேவையான பொருட்கள், ஐஸ் க்யூப் எடுக்கும் குச்சி என கிஃப்ட் செய்ய பல பொருட்கள் உள்ளன.

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

காபி பிரியர்

இவர்களுக்கு பொதுவாக விதவிதமான மக் கொடுக்கலாம். எத்தனை கொடுத்தாலும் எல்லாவற்றையும் வாங்கி வீட்டில் வைத்துக்கொண்டு மனநிலைக்கு ஏற்றது போல எடுத்து பயன்படுத்திக்கொள்வார்கள். இது போக காபி பீட்டர் என்ற காபியை வேகமாட கலக்கி நுரை உண்டாக்கும் மிஷின் உள்ளது, விலை உயர்ந்த, டேஸ்டான காபி பொடிகள் உள்ளன. இவற்றில் ஒன்றை பரிசலிக்கலாம்.

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

தொடர்புடைய செய்திகள்: Valentines Day Wishes: ஏதாவது ஒன்று சொல்! பொறுப்பதா? போவதா? - உங்கள் காதலை சக்சஸ் ஆக்க நச் கவிதைகள்!

இசை பிரியர்கள்

இசையில் இருந்து பிரிக்க முடியாத பிரியத்தை கொண்ட இவர்களுக்கு கொடுக்க பல்வேறு சாதனங்கள் உள்ளன. முதலில் ஒரு நல்ல ஹெட்போன், இயர்போன் அல்லது ஸ்பீக்கர். பின்னர், இசை சம்மந்தபட்ட டிசைன் செய்யப்பட்ட காபி மக், ஸ்பாட்டிஃபை பிளே லிஸ்ட் போலவே டிசைன் செய்யப்பட்ட கஸ்ட்டமைஸ்டு போட்டோ கிளாஸ், கிட்டார் ப்ரேஸ்லெட், ஸ்பாட்டிஃபை கீ செயின், மார்ஷல்ஸ் போன்ற அழகான ஸ்பீக்கர்கள் கொடுக்கலாம்.

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

விளையாட்டு வீரர்

ஏதோ ஒரு விளையாட்டின் மீது ஆர்வம் கொண்டு அதில் நிபுணத்துவம் பெட்ரா ஒருவர் என்றால், அவருக்கு அடிக்கடி தேவைப்படும், ஷூ, ட்ராக் பேண்ட்ஸ், வீட்டிலேயே ஒர்க் அவுட் செய்ய சில பொருட்கள், உத்வேகம் அளிக்கும் வார்த்தைகள் கொண்ட  டீ ஷர்ட், ப்ரேஸ்லெட் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் கொடுக்கலாம். 

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

Valentines Day: காதலர் தினத்தில் என்ன கிப்ட் கொடுக்குறதுன்னு தெரியலையா? கவலையை விடுங்க..!

மூவி பஃப்

அதிகம் திரைப்படம் பார்க்கும் ஆர்வம் உள்ளவர் என்றால், சினிமா டூடுல் டிசைன் செய்யப்பட்ட சுவர் கடிகாரங்கள், காபி மக், போஸ்டர்கள், தலையணை, சுவர் ஸ்டிக்கர்கள் வாங்கி தரலாம்.

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

வீட்டை அலங்கரிக்க விரும்புபவர்

இந்த வகை நபர்களுக்கு கிப்ட் கொட்டிக்கிடக்கிறது. ஆனால் அவர்கள் டேஸ்டிற்கு தேர்வு செய்வது மட்டுமே ஒரே கடினமான வேலை. விளக்கு, கடிகாரம், டேபிள் மேல் வைக்கும் அழகு பொருட்கள், ஜன்னல் திரை, என பல விஷயங்கள் உள்ளன.

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

பழைய பொருட்களை விரும்புபவர்

ஆன்டிக் லவ்வர்ஸ் என்று கூறப்படக்கூடிய இவர்களுக்கு பழைய டிசைனில் செய்யப்பட்ட கடிகாரங்கள், விளக்குகள், வீட்டு அலங்கார பொருட்கள் நிறைய உள்ளன. வெள்ளை நிற உட்புற சுவர் உள்ள வீட்டில் இருப்பவர் என்றால் பெரும்பாலும் டார்க் பிரவுன் நிறத்தில் உள்ள பொருட்கள், மற்றும் மரத்தில் செய்யப்பட்ட பொருட்கள் வாங்கித் தரலாம். 

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

தன்னைத்தானே அதிகம் விரும்பும் நபர்

இந்த வகை நபர்களுக்கு அவர்கள் உடல் அழகு சார்ந்த விஷயங்களை வங்கலாம். உடைகள் என்றால் அவர்களுக்கு பிடிக்குமா என்ற அச்சம் இருக்கும். அதனால் அழகு சாதன பொருட்கள், ட்ரிம்மர், வாசனை திரவியம், போன்றவற்றை வாங்கி கொடுக்கலாம்

பரிசுகள் வாங்க இங்கே கிளிக் செய்யவும்

புத்தகப் பிரியர்

அதிகம் புத்தகம் வாசிக்கும் நபர்களுக்கு பல நாட்களாக தேடும் புத்தகம் என்று ஒன்று இருக்கும். அவர்களிடம் பேசிக்கொண்டிருக்கும்பிது சாதாரணமாக அவை வெளிப்படும். அதனை எப்படியாவது வாங்கி கொடுத்துவிட்டால் எல்லா பரிசுகளையும்விட அதிகம் மகிழ்வார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
IPL Auction 2025 LIVE: 18 வயது ஆப்கானிஸ்தான் வீரரை 4.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது மும்பை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் - அன்புமணி ஆவேசம்
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
WTC Points Table: இந்தியா எப்போதுமே கெத்து! டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் சரிந்த ஆஸ்திரேலியா!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
”அய்யோ என்னடா பண்ணி வச்சுருக்க?” செல்ல நாய்க்காக கதறிய குடும்பம்..!
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்;  தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
விஜய்க்கு தலைவலியை தரும் நிர்வாகிகள்; தவெகவினர் மீது வழக்கு பதிவு.. ஏன் தெரியுமா ?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
இதுவே என் பிறந்தநாள் வேண்டுகோள்: பாசமா கேட்கும் உதயநிதி; செய்வார்களா திமுக நிர்வாகிகள்?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
TNPSC Notification: வந்தாச்சு அடுத்த அறிவிப்பு: டிஎன்பிஎஸ்சி வேலைவாய்ப்பு பயிற்சித் துறையில் பணி- விண்ணப்பிப்பது எப்படி?
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையில் நிர்வாகிகள் மோதல்; அதிமுக கூட்டத்தில் பரபரப்பு
Embed widget