கோதுமை முறுக்கு கோலாகலம் தருமாம்... தீபாவளிக்கு ட்ரை பண்ணுங்க!
. தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து என்ன ரெசிபி செய்யலாம், எது சுவை மிக்கதாக இருக்கும், எது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும், நேரம் எவ்வளவு செலவாகும் போன்ற பல்வேறு யோசனைகள் இருக்கும்.
தீபாவளி வந்தாலே விதவிதமான பலகாரங்கள் செய்து நண்பர்கள் மற்றும் உறவுகளுக்கு பகிர்ந்து மிகவும் தித்திப்பாகவும் , கொண்டாட்டமாகவும் இருக்கும். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்து என்ன ரெசிபி செய்யலாம், எது சுவை மிக்கதாக இருக்கும், எது உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும், நேரம் எவ்வளவு செலவாகும் போன்ற பல்வேறு யோசனைகள் இருக்கும். இந்த பலகாரங்களில், சமீப காலமாக சிறுதானிய பலகாரங்கள் பிரபலமாகி கொண்டு இருக்கிறது. ராகி முறுக்கு, சிறுதானிய மிக்ஸர், சிறுதானிய லட்டு, என காரம் மற்றும் இனிப்பு வகைகள் அனைத்தும் ஆரோக்கியமாக செய்ய ஆயத்தமாகி கொண்டு இருக்கின்றனர். இந்த தீபாவளி பலகார வரிசையில் இருந்த மாதிரி கோதுமை முறுக்கு செஞ்சு பாருங்க. ருசியும் பிரமாதமாக இருக்கும். உடலுக்கு ஆரோக்கியமாகவும் இருக்கும்.
கோதுமை முறுக்கு செய்வதற்கு தேவையான பொருள்கள்
கோதுமை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1 கப்
தனி மிளகாய் தூள் - 1/2 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
ஓமம் - 1/4 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கோதுமை முறுக்கு செய்முறை
- கோதுமை மாவு மற்றும் அரிசி மாவு இரண்டையும் இட்லி பானையில் வைத்து வேக வைக்கவும்.
- வெறும் மாவை மட்டும் வேகவைக்கவும். மாவில் எண்ணெய் மற்றும் தண்ணீர் எதுவும் கலக்காமல் வெறும் மாவை மட்டும் வேகவைக்கவும்.
- மாவு வெந்தவுடன் ஒரு தட்டில் போட்டு ஆறவைக்கவும். கோதுமை மாவு கட்டிக்கட்டியாக தான் இருக்கும். ( கட்டியாக இருந்தால் கோதுமை மாவு வெந்துவிட்டதாக அர்த்தம் )
- இந்த மாவு கை பொறுக்கும் அளவிற்கு சூடு ஆனவுடன், கட்டிகளை உடைத்து விடவும்.
- இந்த மாவை மிக்ஸியில் நன்றாக அரைத்து , சலித்து எடுத்து வைத்து கொள்ளவும்.
- கோதுமை மாவு முறுக்கு செய்ய சரியான பதத்துடன் வந்து விட்டது.
- ஒரு அகலமான பாத்திரத்தில் இந்த கோதுமை மாவு, எடுத்து வைத்து இருக்கும், மிளகாய் தூள், ஓமம், பெருங்காயத்தூள், மற்றும் தேவையான அளவு உப்பு, மற்றும் 2 டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து முறுக்கு பதத்திற்கு கலந்து வைத்து கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, முறுக்கு அச்சில் போட்டு, பிடித்த வடிவத்தில் முறுக்கு பிழிந்து எடுக்கலாம்.
- நன்றாக பொன்னிறமாக வந்த பிறகு முறுக்கு எடுத்து தனியாக எண்ணெய் வடிய வைத்து விட வேண்டும்.
- சுவையான கோதுமை முறுக்கு தயார்