மேலும் அறிய
Advertisement
சாப்பிடும்போது கறிவேப்பிலையை ஒதுக்குபவர்களா நீங்க; இத மிஸ் பண்ணாம படிங்க...!
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது.
கறிவேப்பிலை என்பது சமையலில் வாசனைக்காகப் பயன்படுத்தப்படும் ஒருவகை இலையாகும். “கறிவேம்பு இலை” என்ற சொல் தான் பிற்காலத்தில் மருவிக் கறிவேப்பிலை என்று ஆனது. நம்முடைய பாரம்பரியமான சமையல் முறைகளில் கறிவேப்பிலை தவறாமல் இடம்பெறும். இந்தக் கறிவேப்பிலை புதர்ச்செடி அல்லது குறுமரம் வகையைச் சேர்ந்தது. கறிவேப்பிலை, ஏராளமான நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக, இரத்த சோகையைக் குணப்படுத்துகிறது.வயிற்றுப் போக்கு மற்றும் மூலநோய் சிகிச்சைக்கு உகந்தது. குமட்டல் மற்றும் தலைச்சுற்றுக்குத் தீர்வாக உள்ளது.சீரான இரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. வேதிச்சிகிச்சையால் ஏற்படும் (கீமோதெரபி) பக்க விளைவுகளைக் குறைக்கிறது. கண்பார்வையை மென்மேலும் உறுதியாக்கிறது. கல்லீரலைப் பாதுகாக்கிறது. கெட்டக் கொழுப்பினைக் குறைக்கிறது. நோய் மற்றும் இதய நோய்களிலிருந்து தடுக்கும் நல்ல கொழுப்பின் உற்பத்தி அளவை அதிகப்படுத்துகிறது. முடியை வலுவாக்குகிறது. நீரிழிவு நோய்க்குத் தீர்வாகிறது. செரிமான மண்டலத்திற்கும் நல்லது.
பொதுவாக இன்றைய காலத்தில் பலர் சந்திக்கும் பிரச்சினைகளுள் கூந்தல் பிரச்சினை முக்கிய இடம் பெறுகின்றது. முடியின் வேர்கால் பலவீனப்படுவதாலும் இராசயனப் பொருட்கள் படுவதாலும் முடி அதிகம் கொட்டுகின்றது. இதற்காக பணத்தை அதிகம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து கூட எளியமுறையில் போக்க முடியும். அதிலும் கறிவேப்பிலை பெரிதும் உதவுகின்றது. தற்போது எப்படி கறிவேப்பிலையை முடி வளர்ச்சிக்காக எப்படி பயன்படுத்தலாம் என பார்ப்போம்.
* கைப்பிடி அளவு கறிவேப்பிலையினை சிறிதளவு தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி எண்ணெய் கருத்தவுடன் ஆற விட்டு தலையில்தடவி மசாஜ் செய்து ஒரு மணி நேரம் சென்று தரமான ஷாம்பு கொண்டு தலையினை அலசி விடவும். வாரம் இருமுறை செய்யலாம். பொடுகு நீங்கும். நரை தவிர்க்கப்படும். முடி நன்கு வளரும்.
* கறிவேப்பிலையினை நன்கு அரைத்து அதில் சிறிது தயிரினைக் கலந்து தலையில் தடவி 1 மணி நேரம் வைத்திருந்து தலையினை நன்கு அலசி விடுங்கள். வாரம் ஒரு முறை செய்ய முடி செழித்து வளரும்.
* கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு நெல்லிக்காய், ஒரு ஸ்பூன் வெந்தயம் மூன்றையும் மிக்ஸியில் மைய அரைத்து அதை முடியில் தடவி ஊற வையுங்கள். பின் 1 மணி நேரம் கழித்து தலையை அலசிவிடுங்கள். முடி உதிர்வை குறைக்கும்.
* சில செம்பருத்தி இலைகளை எடுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் கைப்பிடி கறிவேப்பிலையை சேர்த்து மைய அரைத்து முடியில் தடவுங்கள். நன்கு ஊறியதும் தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடியின் வேர்களை உறுதியாக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்னையும் இருக்காது.
* கைப்பிடி கறிவேப்பிலை மற்றும் வெந்தயம் 2 ஸ்பூன் என எடுத்துக்கொள்ளுங்கள். அதை தேங்காய் எண்ணெய்யில் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். ஆறியதும் வடிகட்டி தலையின் வேர்களில் படும்படி தடவி மசாஜ் செய்யுங்கள். ஒரு மணி நேரம் ஊற வைத்து தலைக்கு குளித்துவிடுங்கள். இது முடி உதிர்வை தடுக்க சிறந்த வழி.பல பிரச்சனைகளுக்கு தீர்வை மருத்துவமனைகளில் தேடி அலைகிறோம். ஆனால் நம் வீட்டு சமையலறையிலேயே ஏராளமான மருத்துவ ரகசியங்கள் கொட்டிக்கிடக்கின்றன என்பதுதான் உண்மை.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion