சைவப் பிரியர்களே.. தேங்காய் பால் சாதம் செய்வது இப்படித்தான்?
சுவையான தேங்காய் பால் சாதம் எப்படி ஈசியா செய்யுறதுனு பார்க்கலாம் வாங்க.
எப்போதும் சாப்பிடும் உணவு வகைகளை சாப்பிட்டு அளுத்து விட்டதா? அப்போ தேங்காய் பால் சாதாம் டரை பண்ணி பாருங்க. இது ஒரு வித்தியாசமான சுவையில் இருக்கும். வாங்க தேங்காய் பால் சாதம் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2 கப் அரிசி , 4 கப் தேங்காய் பால், 2 பெரிய வெங்காயம் ,3 பச்சை மிளகாய், 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 துண்டு பட்டை, 3 துண்டு லவங்கம், 3 டேபிள் ஸ்பூன் கரி மசால் பொடி, நெய் தேவையான அளவு, புதினா தேவையான அளவு ,கொத்தமல்லி தேவையான அளவு, கரிவேப்பிலை தேவையான அளவு.
செய்முறை
முதலில் 2 தேங்காயை எடுத்து உடைத்து தேங்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்னர் தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்பு அரைத்த தேங்காயை வடிகட்டி 3லிருந்து 4 கப் அளவிற்கு தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன்னதாக அரிசியை இரண்டு முறை தண்ணீரில் அலசி ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை நறுக்கி கொள்ள வேண்டும். கொத்தமல்லியையும் புதினாவையும் சாதத்திற்கு தேவையான அளவு எடுத்துக்கொண்டு நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கரை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு நெய் ஊற்ற வேண்டும். பின்பு தேவையான அளவு எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் சூடாகிய பின் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ள வேண்டும். அதன் பிறகு வெட்டி வைத்திருக்கும் பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு பேஸ்ட் ,வெங்காயம், புதினா சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயம் பொன்னிறமாக வந்தவுடன் அதில் தேங்காய் பால் தேவையான அளவு உப்பு, கறிமசால் பொடி, சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தேங்காய் பால் கொதித்தவுடன் ஊறவைத்துள்ள அரிசியை குக்கரில் சேர்த்து இரண்டு விசில் வரும் வரை மூடி வைத்து விட வேண்டும். இரண்டு விசில் வந்தவுடன் அடுப்பை அணைத்து விட்டு, குக்கரை இறக்கி விட வேண்டும். பிரஷர் இறங்கிய உடன் சாதத்தின் மீது, சிறிதளவு நெய் உற்றி, கொத்தமல்லியை தூவினால், சுவையான தேங்காய் பால் சாதம் தயார்.
மேலும் படிக்க
Accident: தலைகுப்புற கவிழ்ந்த காய்கறி வண்டி; சாத்தான் குளத்தில் பரபரப்பு; டிரைவருக்கு என்ன ஆச்சு?