Chocolate Day : சாக்லேட் தினம்: உங்கள் பார்ட்னரை ‘ஸ்வீட்டாக’ மகிழ்விக்க சில ஐடியாக்கள்..
சில பேக்கரிகளில் காதலர் தினத்துக்கு என்று சிறப்பாக செய்யப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கப்படும்
பிப்ரவரி 7ம் தேதி தொடங்கும் காதலர் வாரம் 14ந் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் சாக்லேட் தினம் ஆகும். அது பிப்ரவரி 9 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் உங்களுக்குப் பிடித்த சாக்லேட்டுகளை உங்கள் நெருங்கியவர்களுக்கு பரிசளிக்கலாம்.
சாக்லேட் பூங்கொத்துகள்: வண்ணமயமான பூக்களை விரும்புவோருக்கு பூங்கொத்துகள் எப்போதுமே மிகவும் பிடித்தமானதாக இருக்கும். ஆனால் உங்கள் சாக்லேட் தினக் கொண்டாட்டத்தை ஸ்வீட்டானதாக்க சாக்லேட் பூங்கொத்துகளைப் பரிசாகத் தரலாம். இந்த அவுட் ஆஃப் பாக்ஸ் பூங்கொத்துகள் உள்ளூர் ஃப்ளவர் போக்கே ஷாப்களில் அல்லது சாக்லெட் விற்பனை நிலையங்களிலேயே கிடைக்கப் பெறுகிறது. இதனை கஸ்டமைஸ் செய்து தர உங்கள் பார்ட்னருக்கு பிடித்தமான சாக்லேட்களை தேர்வு செய்து அதில் சில ஸ்வீட் குறிப்புகளை சேர்த்துப் பரிசளிக்கலாம்.
சாக்லேட் பாக்ஸ்: சில பேக்கரிகளில் காதலர் தினத்துக்கு என்று சிறப்பாக செய்யப்பட்ட சாக்லேட்கள் விற்பனைக்கு வைக்கப்படும். அவற்றை அழகான ஒரு பாக்ஸில் பேக் செய்து விற்பனைக்கு வைப்பார்கள். ஆனால் இதையே உங்களுக்கு ஏற்ற வகையில் கஸ்டமைஸ் செய்யமுடியும். உங்கள் பார்ட்னர் விரும்பும் சுவைகளை தேர்ந்தெடுத்து பேக் செய்து பரிசளிக்கலாம். அது ஸ்வீட் குறிப்புகளையும் சேர்க்கலாம்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட சாக்லேட்டுகள்: உங்கள் பார்ட்னரை ஸ்பெஷலாக உணர வைக்க சிறந்த வழி வீட்டிலேயே சாக்லெட் தயாரிப்பது. பல யூட்யூப் சேனல்களில் எளிதில் செய்யக்கூடிய சாக்லேட் அல்லது சாக்லேட் ப்ரவுனிக்களின் விவரங்கள் கிடைக்கப் பெறுகின்றன. உங்கள் நண்பர்கள் உதவியுடனோ அல்லது நீங்களாகவோ முயற்சி செய்து அவற்றை உங்கள் பார்ட்னருக்கு செய்து தரலாம்.
சாக்லேட் ப்ளேட்: அனைத்து வகையான சாக்லேட்களையும் விரும்புவோருக்கு இதைவிடச் சிறந்த பரிசு வேறு இருக்க முடியாது. எல்லாவிதமான சாக்லேட் ரெசிபிகளையும், உணவு வகைகளையும் முயற்சி செய்யத் தயாராக இருப்பவர்களுக்கு இதனை பரிந்துரைக்கலாம். இந்த சாக்லேட் ப்ளேட் உங்களின் டேட் நைட்ஸ் மற்றும் மூவி நைட்ஸ்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.
இதய வடிவ சாக்லேட்டுகள்: காதலர் வாரத்தில் அன்பை வெளிப்படுத்த இதய வடிவிலான சாக்லேட்கள் சிறந்த பரிந்துரையாக இருக்கும். இதய வடிவ சாக்லேட்டுகளை நீங்களே செய்யலாம், வாங்கலாம் அல்லது கஸ்டமைஸ் செய்து பெறலாம்.மேலும் இதய வடிவிலான பெட்டியில் சாக்லேட்டுகளை கொடுப்பதற்கு மாற்றாக இதய வடிவிலான பெட்டிகளில் சாக்லேட்களை நிரப்பிப் பரிசளிக்கலாம்.