மேலும் அறிய

Health Tips: வாஸெக்டாமி செய்வதால் ஆண்மைக்குறைவு ஏற்படுமா? உண்மை என்ன?

வாஸெக்டாமி செய்வது ஆண்மைக் குறைபாட்டையும் விறைப்புத்தன்மையில் பாதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது...அது உண்மையில்லை.

செக்ஸ் என்பது இந்தியக் குடும்பங்களில் உச்சரிக்கக் கூடாத சொல்லாகவே பார்க்கப்படுகிறது. இதனால் அதைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டிய பெரும்பாலான தகவல்களை அறிந்துகொள்ளாமலேயே நாம் நகர்ந்துவிடுகிறோம். இதனால் ஆன்லைனில் அதுகுறித்தத் தவறான தகவல்களை சிலர் நாடுகின்றனர். 
இதனால் பாலியல் உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் குறித்து சரியான புரிதலை நாம் எட்டுவதில்லை. 
உதாரணத்துக்கு வாஸக்டாமி என்னும் ஆண்களுக்கான குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்தால் ஆண்மை குறையும் என்கிற பொதுவான பார்வை உள்ளது.  அது உண்மையா? பார்ப்போம்...

வாசெக்டமி என்றால் என்ன?

வாசெக்டாமி என்பது ஆணுறுப்பில் இருந்து விந்து வெளியேறுவதைக் தடுக்க விந்தணுக்குழாயை மூடும் ஒரு வித குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை ஆகும். பெண்களுக்குச் செய்யப்படும் அறுவை சிகிச்சையை விட இந்த முறை மிக எளிது வேகமாகச் செய்யக் கூடியதும் கூட...

இருப்பினும் இந்த செயல்முறை டெஸ்டோஸ்டிரோன் அளவையோ அல்லது விந்தணுக்களை உற்பத்தி செய்யும் உடலின் திறனையோ பாதிக்காது, ஏனெனில் இது விந்தணுக்களை சீர்குலைக்காது. மாறாக இது விந்தணுவை விந்துக்குள் நுழைவதை மட்டுமே தடுக்கிறது, எனவே கருத்தரித்தல் சாத்தியமற்றது. சுருக்கமாக, இது ஒரு பயனுள்ள கருத்தடை முறையாகும், ஆனால் உங்கள் இனப்பெருக்க ஆரோக்கியத்தின் மற்ற அம்சங்களில் இது எந்த விளைவையும் ஏற்படுத்தாது.

ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

வாஸெக்டாமி செய்வது ஆண்மைக் குறைபாட்டையும் விறைப்புத்தன்மையில் பாதிப்பையும் ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. அது உண்மையில்லை. வாஸக்டாமி என்பது விந்தணுக்களிலிருந்து விந்தணுக்களை எடுத்துச் செல்லும் குழாய்களை அடைக்கும் முறை, அதனால் இது விறைப்புத்தன்மையையும் பாதிக்கும் என்று சிலர் கருதலாம். ஆனால் விறைப்புத்தன்மை என்பது ஆணுறுப்பில் இருக்கும் ரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்ததே ஒழிய குழாய்களை அடைப்பதால் அதில் பாதிப்பு ஏற்படாது.

கூடுதலாக, வாஸெக்டமி செய்துகொள்வது டெஸ்டோஸ்டிரோன் அளவை பாதிக்காது, மேலும் செக்ஸில் எந்தவிதமான பாதிப்பையும் பார்ட்னருக்கு இது ஏற்படுத்தாது. இன்னும் சொல்லப்போனால் பெண்கள் எதிர்பாராமல் கருத்தரிக்கும் ஆபத்தில் இருந்து இது தடுக்கிறது எனலாம் மற்றபடி அடிப்படையாக சில உடல்நல பாதிப்புகள் இல்லாத நிலையில் வாஸெக்டாமியால் உங்களது செக்ஸ் வாழ்க்கையில் எவ்வித பாதிப்பும் நேராத என்பது உறுதி 

மேலும், ஆண்களின் பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் பல்வேறு மருந்துகள் கிடைக்கின்றன. எனினும், மருந்துகள் இல்லாமலே பாலியல் செயல்திறனை அதிகரிக்கும் வழிகள் அதிகம் இருக்கின்றன. ஆணுறுப்பு என்பது நல்ல ரத்த அழுத்தத்தின் போது சிறப்பாகப் பணியாற்றுவதால், இதய நோய்களில் இருந்து தவிர்க்கும் அனைத்து முறைகளும் பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவும். அதற்கான வழிமுறைகளை இங்கே அளித்துள்ளோம். 

1. சுறுசுறுப்பாக இயங்குவது

கார்டியோ உடற்பயிற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, பாலியல் செயல்திறனை அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் வியர்வை வெளியேறும் வகையில் உடற்பயிற்சி செய்வது பாலியல் செயல்திறனை ஊக்கப்படுத்தும்

2. பழங்களையும் காய்கறிகளையும் உண்பது

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் காய்கறிகளையும் பழங்களையும் உண்ண வேண்டும். வெங்காயம், பூண்டு ஆகியவை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுப் பொருள்கள். வாழைப்பழங்கள் ரத்த அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டவை என்பதால் அவை பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவி புரிகின்றன. இயற்கையில் விளையும் மிளகுப் பொருள்களுக்கும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் திறன் உண்டு. 

3. இறைச்சி வகைகளை உண்பது

மீன்கள், ஆலிவ் ஆயில் முதலானவற்றில் கிடைக்கும் ஒமேகா 3 ஆசிட், வைட்டமின் பி1 நிறைந்த பயிறுகள், முட்டைகள் முதலானவை பாலியல் செயல்திறனை அதிகரிக்க உதவி செய்கின்றன

தலைப்பு செய்திகள்

Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?

வீடியோ

Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kerala Accident: 3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
3 பேரை காரில் இடித்துக் கொன்ற இளைஞன்..! “இந்த விஷயத்தை அப்பா பார்த்துக்கொள்வார்” என பஞ்ச்
TVK Vs EPS: ”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
”உங்களுக்கா ஏமாற்ற தெரியாது” லிஸ்ட் போட்டு எடப்படியை சரமாரியாக தாக்கி விமர்சித்த தவெக
Chennai Airport: 20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
20 வருடங்களுக்கு தாங்கும்..! விமான நிலைய அப்க்ரேடிற்கு பக்கா ப்ளான் - ட்ராஃபிக்கை குறைக்க கூடுதல் வசதி
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
Loan Camp : ‘காலையிலேயே முக்கிய அறிவிப்பு’ மெகா கடன் தரும் முகாம்களை அறிவித்த கூட்டுறவுத்துறை – யார், யாரெல்லாம் கடன் பெறலாம்..?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு..! 11 மாவட்டங்களுக்கு வார்னிங், சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
Embed widget