பல் ஈறுகளில் ரத்தக்கசிவு ஏற்படுகிறதா? மருத்துவரை சந்திப்பதற்கு முன்பாக இந்த டிப்ஸ் பலனளிக்கும்...
ஒருவரின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றுவது அவர்களின் பல் வரிசைகள்தான். தினமும் காலையில் பல் துலக்கி பற்களைப் பராமரிப்பதுபோல் ஈறுகளில் ஏற்படும் பிரச்சனைகளை கவனத்தில் கொள்வதில்லை.
மக்களில் பெரும்பாலானோருக்கு ஈறுகளில் ரச்சக்கசிவு பிரச்சனை அதிகளவில் ஏற்படும். இதற்காக மருத்துவனைக்குச் செல்ல வேண்டாம். வீடுகளில் உள்ள கற்றாழை, கிராம்பு எண்ணெய், நெல்லி போன்றவற்றைப் பயன்படுத்தி சரிசெய்துவிடலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஒருவரின் முகத்தோற்றத்தை அழகாக மாற்றுவது அவர்களின் பல் வரிசைகள்தான். தினமும் காலையில் பல் துலக்கி பற்களை நாம் பராமரித்துவருகிறோம். ஆனால் பல் ஈறுகளை பராமரிப்பதன் முக்கியத்துவதை நாம் மறந்துவிடுகிறோம் என்பது தான் நிதர்சன உண்மை. பலருக்கு அவ்வப்போது பல் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படும் போது வலி மிகுந்ததை உணரும் போது தான் நாம் மருத்துவரை அணுகிறோம். அதுவரை எந்த அக்கறையும் இதற்கு காட்டுவதில்லை என்கின்றனர் அழகியல் பல் மருத்துவர்கள்.
மேலும் பல் ஈறுகளின் அழற்சியினால் ஏற்படும் லேசான நோய் தான் என்றாலும் இதனை ஆரம்பத்திலேயே கவனிக்கவில்லை என்றால் பல பிரச்சனைகளை மக்கள் சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கின்றனர்.
இப்பிரச்சனைக்களுக்கு மருத்துமனைக்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் வீக்கத்தை தடுக்க சில வீட்டு வைத்தியங்களைப்பின்பற்றலாம் என மருத்துவர்கள் தெரிவித்துவரும் நிலையில் அது என்ன? என்று நாமும் இங்கே அறிந்துகொள்வோம்.
ஆயில் புல்லிங்:
நம்முடைய பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை உண்டாக்கும் நோய்த் தொற்றுகளை எதிர்த்துப்போராடுவதற்கு நமக்கு ஒருவகையில் உதவுவது ஆயில் புல்லிங். உங்களது வாயில் சிறிது எண்ணெய் ஊற்றிக்கொண்டு கொப்பளிக்கும் முறைதான் ஆயில் புல்லிங் எனப்படுகிறது. இதற்கு தேங்காய் அல்லது எள் எண்ணெய்யைப் பயன்படுத்தும்போது உங்களது வாயில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழிக்க உதவுகிறது.
ஈறுகளில் இரத்தக்கசிவை கட்டுப்படுத்தும் கற்றாழை:
கற்றாழையில் உள்ள ஜெல்லியை எடுத்து ஈறுகளில் மசாஜ் செய்யவும். இதில் உள்ள பல்வேறு மருத்துவக்குணங்கள் லேசான பல் ஈறு பிரச்சனைகளை சரி செய்வதற்கு உதவியாக உள்ளது. அல்லது கற்றாழை ஜெல்லை அப்படியே உட்கொண்டாலும் பல் ஈறு பிரச்சனைகள் ஏற்படாது.
கிராம்பு எண்ணெய்:
முந்தைய காலங்களில் முன்னோர்கள் பல் வலி ஏற்படும் போது, அங்கு கிராம்பினை வைப்பார்கள். கிராமில் கார்போஹைட்ரேட், புரதம், மினரல் போன்ற பல்வேறு மருத்துவக்குணங்கள் உள்ளது. எனவே பல்வலி மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால் ஒன்று அல்லது இரண்டு கிராம்புகளை எடுத்து மெல்லவும். அல்லது கிராம்பு எண்ணெய்யை எடுத்து உங்கள் ஈறுகளில் நேரடியாக தேய்க்கலாம். இவ்வாறு செய்யும் போது லேசான எரியும் உணர்வை உணரலாம். ஆனால் இது பற்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.
வைட்டமின் சி உள்ள உணவுகளை உட்கொள்ளுதல்:
வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை உட்கொள்ளலாம். இவை பல் ஈறுகளின் வீக்கத்தைக் குறைப்பதற்கு உதவியாக உள்ளது.
எனவே மேற்கூறிய இயற்கையான வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி எந்த மருத்துவமனைக்கும் செல்லாமல் பல் ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு மற்றும் வீக்கத்தைக்குறைக்க பயன்படுத்த ஆரம்பியுங்கள்..