“உடலுறவில் இது ரொம்ப முக்கியம்” - ஹாலிவுட் பிரபலங்கள் சொல்லும் பெஸ்ட் செக்ஸ் டிப்ஸ்..
நிக் ஜோனஸ், க்ளோ கர்தாஷியன், சோஃபியா வெர்கரா முதலான ஹாலிவுட் நடிகர்கள் தங்கள் பாலியல் உறவு அனுபவங்களில் இருந்து ரசிகர்களுக்கு டிப்ஸ் வழங்கியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.
பாலியல் உறவு என்பது ஒவ்வொருவருக்கும் மாறுபடும். எனினும், அதில் சில விவரங்களை மனதில் வைத்துக் கொள்வது இனிமையான அனுபவத்தை அளிக்கும். நிக் ஜோனஸ், க்ளோ கர்தாஷியன், சோஃபியா வெர்கரா முதலான ஹாலிவுட் நடிகர்கள் தங்கள் பாலியல் உறவு அனுபவங்களில் இருந்து ரசிகர்களுக்கு டிப்ஸ் வழங்கியுள்ளனர். அவற்றுள் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம்.
பாடகர் நிக் ஜோனஸ் இதழ் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் "பாலியல் உறவுக்கான மூட் உருவாவதற்கு நல்ல இசை தேவை எனக் கூறியுள்ளார். எனினும், உங்கள் இணையர் இருக்கும் போது உங்களுக்குப் பிடித்த பாடலை மட்டுமே போடுவது தவறு. இருவருக்கும் பிடித்த பாடலையோ, இசையையோ கேட்பது உறவுக்குச் சிறப்பாக அமையும்" எனத் தெரிவித்தார்.
ஹாலிவுட் நடிகை ஜேடா பிங்கெட் ஸ்மித் பாலியல் உறவுக்கான இடத்தை முதலில் திட்டமிட வேண்டும் எனக் கூறியுள்ளார். காதலையும், பிரியத்தையும் வெளிப்படுத்துவதற்கு ஆறுதலான இடத்தைத் தேர்வு செய்வது அவசியம் எனக் கூறுகிறார் ஜேடா.
ஹாலிவுட் நடிகை க்ளோ கர்தாஷியன் தன்னுடைய இணையத் தளத்தில் ”பாலியல் உறவின் போது ஆபாசமாகப் பேசுவது கட்டாயம் எனக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். `பாலியல் உறவின் போது புரிதல் அவசியம். உறவு மேற்கொள்ளும் போது, குரல் எழுப்பாமல் இருப்பது தவறானது எனக் கருதுகிறேன். நான் உறவுகொள்ளும் நபர் குரல் எழுப்பாவிட்டால் எனக்கு உணர்வு தோன்றாது. மேலும், அவர் மகிழ்ச்சியாக இருக்கிறான் என்பதை நான் தெரிந்துகொள்வது எப்படி? ஒரு செயலை மகிழ்வோடு செய்யும் போது, குரலை உரக்க உயர்த்துவதில் எந்தத் தவறும் இல்லை. உங்கள் இணையை மகிழ்விக்க குரலை உயர்த்துவது பயன்படும். குறிப்பாக நீங்கள் புதிதாக ஒன்று சேர்ந்திருக்கும் ஜோடியாக இருந்தால் கூடுதல் ப்ளஸ்’ என க்ளோ கர்தாஷியன் தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகர் ஜான் ஸ்டேமோஸ் உடல் மொழியின் மீதான கவனத்தைக் குவிக்க அறிவுறுத்துகிறார். `எனக்கு சில அனுபவங்கள் இருக்கிறது.. ஆனால் அவை அனைத்துமே கேட்பது, கேள்வி எழுப்புவது, உரையாடுவது ஆகியவற்றின் மூலமாக சாத்தியமாகின்றன... சில பெண்கள் பேசுவதற்கு அச்சம் கொண்டிருக்கலாம்’ எனக் கூறியுள்ளார் ஜான் ஸ்டேமோஸ்.
`ஆனால் பல பெண்களும், `இது நன்றாக இருக்கிறதா?’ எனக் கேள்வி கேட்கும் போது உண்மையை வெளிப்படுத்த தயங்குவர். எனவே பெண்களின் உடலையும், அதன் மொழியையும் கவனிக்க வேண்டும். பாலியல் உறவை இசையை அணுகுவதைப் போல அணுக வேண்டும். ஒரு பெண்ணுடனான மெலடியை விட அதனை ரிதம் என்று அழைப்பது பொருத்தமாக இருக்கும்.. ஆனால் இவை அனைத்துமே கவனம் கொள்வதால் சரியாக நடைபெறும்.. சரியான இசை என்றால் உங்களால் அதனை உணர முடியும்.. பெண்களுடன் இருக்கும் போது, அவர்களது உடல்களின் எதிர்வினைகளைக் கூர்ந்து கவனிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார் நடிகர் ஜான் ஸ்டேமோஸ்.
மற்றொரு ஹாலிவுட் நடிகை சோஃபியா வெர்கரா அளித்த நேர்காணலில், பாலியல் உறவுக்காக வெவ்வேறு வகையிலான புதிய உடைகளை அணிவது உறவில் கூடுதல் சிறப்பை அளிக்கும் எனக் கூறியுள்ளார்.