Soup Recipe | இந்த சூப் ரெசிப்பி.. இவ்வளவு நன்மைகள் இருக்கு.. டீ, காபியை ஓரம்கட்டலாம் ஈஸியா..!
மழைக்காலம் மற்றும் குளிர் காலத்திற்கு ஆரோக்கியமான தேர்வாக இந்த தக்காளி சூப் இருக்கும். தினம் டீ காபி குடிப்பதற்கு பதிலாக, தினம் மாலை இந்த குளிர்க்கு இதமாக ஒரு சூப் குடிச்சு பாருங்கள்.
மழை காலம் மற்றும் குளிர்காலத்திற்கு ஆரோக்கியமான தேர்வாக இந்த தக்காளி சூப் இருக்கும். தினம் டீ காபி குடிப்பதற்கு பதிலாக, தினம் மாலை இந்த குளிருக்கு இதமாக ஒரு சூப் குடிச்சு பாருங்கள். இதமாகவும் இருக்கும். ஆரோக்கியமாகவும் இருக்கும். காரம் , மற்றும் அளவான புளிப்பு சுவையுடன் சூடாக எடுத்துக்கொண்டால், அடடா என்ன ருசியா இருக்கும்.
எலும்பு ஆரோக்கியம் - தக்காளியில் வைட்டமின் கே மற்றும் கால்சியம் சத்து நிறைந்து இருக்கிறது. இது எலும்பு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கும். மேலும் ஆஸ்டியோபெரோசிஸ் எனும் எலும்பு தேய்மான பிரச்சனை வராமல் பாதுகாக்கும். இதில் இருக்கும் லைகோபீன் ஆனது எலும்பின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
இதய ஆரோக்கியம் - தக்காளியில் இருக்கும் வைட்டமின் சி ஆனது, இதயம் , தமனிகள் சீராக இயங்க உதவும். பக்கவாதம் வராமல் தடுக்க உதவும். இது இரத்த குழாய்களில் கொழுப்பு படிவத்தை தடுக்கிறது. இதயம் ஆரோக்கியமாக செயல்பட உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - தக்காளியில் லைகோபீன் நிறைந்து இருக்கிறது.இது தக்காளிக்கு இயற்கையான நிறமியை தருகிறது. தக்காளி அழகான நிறத்தில் இருப்பதற்கு இதுதான் காரணம். இது உடல் இருக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தை நடுநிலைப்படுத்துகிறது. இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்திகிறது.
இரத்த ஓட்டம் - இதில் இருக்கும் செலினியம் இரத்த ஓட்டம் சீராக நடப்பதற்கு உதவியாக இருக்கிறது. இரத்த சோகை வராமல் தடுக்கும்.
உடல் எடை குறைதல் -தக்காளி சூப் ஆலிவ் எண்ணையுடன் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடல் எடை குறையும். இது உடல் எடை குறைப்பதற்கு உதவியாக இருக்கும். நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் நிறைந்த தக்காளி சூப் அன்றாடம் எடுத்து கொள்வதால் உடல் எடை குறையும். வீட்டில் தக்காளி இருந்தால் 10-15 நிமிடங்கள் போதுமானது தக்காளி சூப் செய்வதற்கு.
தக்காளி சூப்பில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் - இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துகள் நிறைந்து இருக்கிறது. 16% வைட்டமின் ஏ சத்தும், 20% வைட்டமின் சி சத்து இருக்கிறது. அதாவது ஒரு நாளைக்கு தேவையான ஊட்டச்சத்துகளை இது தருகிறது.
புற்றுநோய் - இதில் கரோடீனாய்டுகள் மற்றும் லைகோபீன் இருப்பதால் இது புற்றுநோய் செல்களை ஆரம்பத்திலே அழிக்கும். புற்றுநோய் செல்கள் வளராமல் இருப்பதால் தக்காளி சூப் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தினம் ஒரு கப் தக்காளி சூப் எடுத்துக்கொள்வது நல்லது.