மேலும் அறிய
Advertisement
வாக்கிங் போனால் வாழ்க்கை வளமாகும்... ஏன் தெரியுமா... ?
அலாரம் வைத்து , தூங்க சென்று காலை அலாரம் அடிக்கும் போது , 5 மினிட்ஸ் கழிச்சு எந்திருச்சுக்கலாம் என அலாரத்தை ஆஃப் செய்து விடுபவர்களாக இருந்தால்...
காலை எழுந்ததும், உடற் பயிற்சி செய்ய வேண்டும் என்பது பெரும்பாலோனோருக்கு ஆசையாக இருக்கலாம். அதற்காக அலாரம் வைத்து , தூங்க சென்று காலை அலாரம் அடிக்கும் போது , 5 மினிட்ஸ் கழிச்சு எந்திருச்சுக்கலாம் என அலாரத்தை ஆஃப் செய்து விடுபவர்களாக இருந்தால் இதை கட்டாயம் படியுங்கள். இத்தனை பயன்கள் இருக்கும் என்று தெரிந்தால் நீங்கள் இன்றில் இருந்து வாக்கிங் போக ஆரம்பித்து விடுவீர்கள்.
- இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுக்கும். உயர் இரத்த அழுத்தம், இதய நோய், போன்றவை வராமல் தடுக்கும் தடுப்பு மருந்தாக செயல்படுகிறது.
- நுரையீரல் செயல்திறனை மேம்படுத்துகிறது. கூடுதலாக ஆக்ஸிஜன் எடுத்து கொள்வதற்கு உதவியாக இருக்கிறது.
- நோய் எதிர்ப்பு மண்டலத்தை .பலப்படுத்துகிறது. தொற்று நோய்கள் வராமல் ஆரோக்கியமாக இருக்க நடைப்பயிற்சி உதவும்.
- உடல் முழுவதும் இரத்த ஓட்டத்தை சீர்படுத்துகிறது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது.
- ஹார்ட் அட்டாக் வரும் அபாயத்தை குறைக்கலாம்.
- எலும்புகள் மற்றும் மூட்டுகள், ஆரோக்கியமாக செய்ய பட உதவுகிறது. எலும்பு மூட்டுகள் மற்றும் மூட்டுகளில் இருக்கும் திரவம் முறையாக செயல்பட உதவுகிறது. ஆர்த்ரைடிஸ், போன்ற பிரசைகள் வராமல் இருக்க உதவும்.
- ஹார்மோன்களின் முறையாக செயல்பட உதவுகிறது. ஹார்மோன் குறைபாடு நோய்களுக்கு சிறந்த பயிற்சியாக இந்த நடைப்பயிற்சி இருக்கிறது.
- மனஅழுத்தம் நிறைந்த நாட்களில், ரிலாக்ஸாக இருக்கவும், அந்த சூழ்நிலைகளில், மிகவும் தன்னம்பிக்கையுடன் செயலாற்றவும் இந்த நடைப்பயிற்சி உதவும்.
- நீண்ட நேரம் அமர்ந்து வேலை செய்வதால், மூட்டுகளில் வரும் சோர்வு, முதுகு வலி, ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக நடைப்பயிற்சி இருக்கிறது.
- வாழ்வில் வெற்றி பெறுவதற்கு எடுத்து வைக்கும் முதல் ஸ்டேப் அதிகாலை எழும் பழக்கம். குறிப்பாக அதிகாலை எழுந்து நடை பயிற்சி மேற்கொண்டு, அதன் பிறகு அலுவல் வேலைகளுக்கு செல்வது, நாள் முழுவதும், புத்துணர்வுடனும், தன்னமபிக்கையுடனும், நடந்து கொள்ள உதவுகிறது. வெற்றி அடைவோம் என்ற நம்பிக்கையை தருகிறது.
- உடலின் திறனை அதிகப்படுத்துகிறது. ஒருவர் நீண்ட நாட்களாக நடை பயிற்சி மேற்கொண்டால், அவர்களின் திறன் அதிகரித்து அடுத்து ஜாகிங், அடுத்து ரன்னிங் போன்ற அடுத்த அடுத்த பயிற்சிகளை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.
- உடல் பருமன் குறையும். உடலில் சேர்ந்து இருக்கும் கொழுப்பை குறைத்து, உடல் வடிவத்துடன் இருப்பதற்கு நடைப்பயிற்சி உதவும்.
- நீரிழுவு நோய், இன்சுலின் செயல்பாட்டை அதிக படுத்தி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்கும்.
நடை பயிற்சி செய்தல் இத்தனை நன்மைகள் கிடைக்கும். இந்த பயிற்சிகள் தினம் மேற்கொள்வது, அதுவும், காலை எழுந்ததும், செய்வது உடலுக்கும் , மனதிற்கு ஆரோக்கியமானதாக இருக்கும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
சென்னை
அரசியல்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion