எப்பவுமே டயர்டா இருக்கா? டல்லா இருக்கீங்களா? : அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..
மாதுளம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. இதை தினம் உணவில் சேர்த்து கொள்ளவேண்டும். தினம் ஒரு மாதுளம்பழம் அல்லது சர்க்கரை சேர்க்காத மாதுளை ஜூஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்
![எப்பவுமே டயர்டா இருக்கா? டல்லா இருக்கீங்களா? : அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க.. are you feeling weak take this juice everyday எப்பவுமே டயர்டா இருக்கா? டல்லா இருக்கீங்களா? : அப்போ இதை ட்ரை பண்ணி பாருங்க..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/22/c0cc320bdc747faa863b18a92602cdc9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதுளம்பழத்தில் எண்ணற்ற நன்மைகள் இருக்கின்றன. இதை தினம் உணவில் சேர்த்து கொள்வதால், உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது. தினம் ஒரு மாதுளம்பழம் அல்லது மாதுளை ஜூஸ் எடுத்து கொள்ள வேண்டும்.
பழச்சாறுகள் ஆரோக்கியமானதாகவும், உடலை புத்துணர்வுடன் வைத்து கொள்ளவும், வைட்டமின் , தாதுக்கள் ஆகிய ஊட்டச்சத்துகள் நிறைந்ததாக இருக்கிறது. மற்ற அனைத்து பழங்களை விட மாதுளை பழம் ஆற்றல் மிக்கது. மாதுளைப்பழத்தில், வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள், வைரஸ் எதிர்ப்பு பண்புகள் நிறைந்து இருக்கிறது.
இதய ஆரோக்கியத்திற்கு சிறந்தது - மாதுளை ஜூஸ் எடுத்து கொள்வது, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதய தமனிகள் தடிமனாவதை தடுக்கும். கொலெஸ்டெரோல் சேர்வதை தடுக்கும். மேலும் இதய சீரான அழுத்தத்துடன் இயங்க உதவும். கர்ப்பகாலத்தில் - கர்ப்பகாலத்தின் போது இந்த பழத்தை எடுத்துக்கொள்வதால், இரத்த சோகை வராமல் தடுக்கும். குழந்தையின் வளர்ச்சிக்கு உதவும். அசதி, சோர்வு நீங்கி புத்துணர்வுடன் இருக்க உதவும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்- தினம் மாதுளை பழம் அல்லது ஜூஸ் குடிப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். இது தொற்றுநோய்களில் இருந்து பாதுகாக்கும்.
ஆர்த்ரைட்டிஸ் - மாதுளையில், எலும்பு மற்றும் தசைகளை வலுப்படுத்தும், பிளாவனால்கள் உள்ளன. இதனை தினமும் உணவில் சேர்த்து கொள்வதன் மூலம், எலும்பு, மூட்டு வலிகள் வராமல் தடுக்கும்.
இரத்தம் உறைவதை தடுக்க - மாதுளையில் ஆண்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்து இருப்பதால், இரத்தம் உறைந்து போவதைத் தடுக்கிறது. இரத்தத்தில் கட்டிகள் உருவாகாமல் இருக்க உதவுகிறது. சிலருக்கு இதயம் மற்றும் மற்ற பகுதிகளில், இரத்த உறைவு ஏற்படும். அவர்களுக்கு இந்த மாதுளை இயற்கை மருந்தாக இருக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்க - மாதுளையில் உள்ள ஆண்டி ஆக்ஸிடென்ட்கள், உடலில் ப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்ற உதவுகிறது. மேலும், புற்றுநோய் ஏற்படுத்தும் செல்கள் உடலில் சேராமல் பார்த்து கொள்ளும். தினம் ஒரு மாதுளை எடுத்து கொள்வதால், புற்று நோய் வராமல் தடுக்கலாம். செரிமானத்தை அதிகரிக்க - மாதுளையில் இருக்கும் நார்சத்து செரிமானத்தை துரிதப்படுத்துகிறது. செரிமான பிரச்சனை இருப்பவர்கள் தினம் ஒரு மாதுளை எடுத்து கொள்ளலாம்.
இரத்த சோகை - இரத்த சோகை நோய் இருப்பவர்களுக்கு உடல் அசதி, சோர்வு , போன்ற பிரச்சனை சேர்ந்து இருக்கும். மேலும் பலவீனமாக உணர்வார்கள். மாதுளை உணவில் சேர்த்து கொள்வது, இரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கும். அதனால் இரத்த சோகை பிரச்சனை சரியாகும். பலவீனமாக இருப்பவர்கள், தினம் ஒரு மாதுளை ஜூஸ் குடித்தால் புத்துணர்வுடன் இருப்பார்கள்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)