எதை பார்த்தாலும் கடுப்பு வருதா... அதற்கான தீர்வு இது தான்!
இன்றைய கால சூழ்நிலையில், வீட்டிலோ, அலுவலகத்திலோ ஏதேனும் ஒரு சூழலில் ஸ்ட்ரெஸ் ஆக உணர்கிறார்கள்.
இன்றைய கால சூழ்நிலையில், வீட்டிலோ, அலுவலகத்திலோ ஏதேனும் ஒரு சூழலில் ஸ்ட்ரெஸ் ஆக உணர்கிறார்கள், எனக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ் ஆக இருக்கிறது என ஸ்ட்ரெஸ் என்ற வார்த்தையை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது பயன்படுத்துகின்ற்றனர். இந்த ஸ்ட்ரெஸ் என்ன எல்லாம் செய்யும் என தெரிந்து கொள்ளுங்கள்.
ஸ்ட்ரெஸ் என்பது இன்று அனைவர்க்கும் இருக்கிறது, அதை சரியாக கையாள்வதே புத்திசாலித்தனம் ஆகும். இதை கையாளுவதற்கு என்ன மாதிரியான தெரபி எடுத்து கொள்ளலாம். எப்போது ஆலோசனை தேவைப்படும் போன்ற பல்வேறு விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்
ஸ்ட்ரெஸ் அதிகமாக இருந்தால், உடல் வலி, தசை பிடிப்பு, தலை வலி, தலை சுற்றல், உயர் இரத்த அழுத்தம், அஜீரணம், வயிறு புண், வயிறு உப்புசம், போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், ஹார்மோன் குறைபாடுகள், போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது போன்ற அறிகுறிகள் வந்தால் கவனத்துடன் ஸ்ட்ரெஸ் கையாள கற்றுக்கொள்ள வேண்டும்.
உதவி கேட்க தயங்காதீர்கள் - மனஅழுத்தமாக இருந்தால், முதலில், உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர்கள் உதவியை கேட்க தயங்காதீர்கள். யாரிடமாவது பேசினால் கூட ரிலாக்ஸாக இருக்கும். அதை முதலில் செய்ய வேண்டும். சில நேரங்களில் இதுவே கூட ஸ்ட்ரெஸ் அதிகமாக காரணமாக அமைந்து விடும். அப்போது மருத்துவ உதவி எடுத்து கொள்ளலாம்
மனம் விட்டு பேசினாலே பெரும்பாலும் ஸ்ட்ரெஸ் காணாமல் போய் விடும். அப்படி இல்லை என்றால் சைக்யாட்ரிஸ்ட் மற்றும் சைக்காலஜிஸ்ட் உதவியை நாடலாம்
சைக்காலஜிஸ்ட் என்பவர்கள், ஆலோசனை வழங்குபவர், தெரபிஸ்ட் . சைக்யாட்ரிஸ்ட் என்பவர் மருத்துவர்.
சைக்காலஜிஸ்ட் அவர்களிடம் ஆலோசனை எடுத்து கொள்ளலாம். மருத்துவ உதவி தேவை என்றால் அவரே சைக்யாட்ரிஸ்ட் அவர்களிடம் செல்வதற்கு பரிந்துரை செய்வார்கள்
வேறு என்ன செய்யலாம் இந்த ஸ்ட்ரெஸ் குறைக்க
பிராணாயாமம் மற்றும் தியான பயிற்சிகள் செய்யலாம்
4-6-8 டெக்னிக் பிராணாயாம பயிற்சிகள் செய்யலாம். அதாவது 4 வினாடி மூச்சை உள்ளிழுக்க வேண்டும். 6 வினாடிகள் மூச்சை உள்ளே இழுத்து பிடித்து வைத்து கொள்ள வேண்டும். 8 வினாடி மூச்சை வெளியில் விட வேண்டும். இதே போன்று ஒரு 10-20 முறை செய்ய வேண்டும். தினம் காலை மாலை செய்வது அன்றாடம் செய்யும் வேலையினால் வரும் மனஅழுத்தத்தை குறைக்கும்.
உணர்வுகளை அடக்கி வைக்காதீர்கள். இது கூட மனஅழுத்தமாக மாறும். எந்த உணர்வாக இருந்தாலும் அதை உடனுக்குடன் வெளிப்படுத்த வேண்டும். அப்போது மனஅழுத்தம் குறையும்.
நண்பர்களிடம் மனம் விட்டு பேசி ஸ்ட்ரெஸ் குறைத்து கொள்ளுங்கள். பெரும்பாலான ஸ்ட்ரெஸ் மனம் விட்டு பேசினாலே பெரிய தீர்வாக இருக்கும்.