(Source: ECI/ABP News/ABP Majha)
இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்பவரா நீங்கள்? எச்சரிக்கை... உங்களுக்குத் தான் இந்த தகவல்!
காலை போதுமான நேரம் இல்லாமல் அல்லது நேரம் ஒதுக்க தவறி விட்டு இரவு நேரத்தில் உடற் பயிற்சி செய்பவரா நீங்கள். அப்போது நீங்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்
காலை போதுமான நேரம் இல்லாமல் அல்லது நேரம் ஒதுக்க தவறி விட்டு இரவு நேரத்தில் உடற் பயிற்சி செய்பவரா நீங்கள். அப்போது நீங்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வதால் அது தூக்கத்தை பாதிக்கும். மேலும் இது இதய ஆரோக்கியத்தை பாதிக்கும். மேலும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
பொதுவாக இரவில் எந்த அளவிற்கு வெளிச்சத்தை குறைத்து கொள்கிறோமோ அந்த அளவிற்கு சீக்கிரம் தூங்க செல்வோம். உடல் இருட்டிற்கு செல்லும் போது தான் தூக்கத்தை தூண்டும் ஹார்மோன் சுரக்க ஆரம்பிக்கும். மெலடோனின் ஹார்மோன் தான் இரவில் சுரக்கும். இது தான் தூங்குவதற்கான ஹார்மோன் ஆகும். இரவில் ஜிம் சென்று அதிக ஒளியில் உடற்பயிற்சி செய்வது, தூக்கத்தை கெடுக்கும். மேலும் ஹார்மோன் குறைபாடுகளை ஏற்படுத்தும்.
பொதுவாக உடற்பயிற்சி செய்வதால், உடல் புத்துணர்வுடன் இருக்கும். அட்ரீனலின் சுரக்க ஆரம்பிக்கும். இது ஒருவரை புத்துணர்வுடன் வைக்க உதவும். உடலுக்கு அதிகளவு ஆக்ஸிஜன் கிடைக்கும். இதய துடிப்பை அதிகரிக்கும்.தசைகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும். அதனால் உடல் சுறுசுறுப்பாக இருக்கும். தூக்கம் வருவது குறையும். இரவு நேரத்தில் அனைத்து வேலைகளையும் முடித்து ஓய்வெடுக்க வேண்டும். ஆனால் உடற்பயிற்சி செய்வதால் புத்துணர்வுடன், தூக்கம் வராது
இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, தூக்கமின்மை ஏற்படுத்தும் இதனால் பல்வேறு ஹார்மோன் குறைபாடுகள் வரும். ஹார்மோன் குறைபாடுகள், உடல் எடையை அதிகரிக்கும். உடல் எடை குறைப்பதற்காக உடற் பயிற்சி செய்தால் எந்த வித பலனும் இல்லாமல் இருக்கும்.
உடற்பயிற்சி செய்வதற்கு ஏற்ற நேரம் காலை நேரம் தான். காலை நேரம் நீங்கள் எப்போதும் எழுந்திருக்கும் நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னதாக எழுந்தால் போதுமானது. உங்களது உடற்பயிற்சிகளை செய்து முடித்து விட்டு உங்களது நாளை புத்துணர்வுடன் தொடங்கலாம். ஒரு நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருப்பதற்கு முதலில் உடற்பயிற்சி செய்வது நல்லது. அது மட்டுமில்லாமல், காலை நேரம் உங்கள் கைகளில் இருக்கும். நீங்கள் உங்களது நாளை எப்படி வேண்டுமோ அப்படி அமைத்து கொள்ளலாம்.
உடற்பயிற்சி செய்வதில் அலுப்பு ஏற்படாமல் இருகக உங்களுக்கு பிடித்த பயிற்சிகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். வாரத்திற்கு 2 அல்லது 3 விதமான பயிற்சிகளை தேர்ந்தெடுத்து வைத்து கொள்ளலாம். நடைப்பயிற்சி, சைக்ளிங், ஸ்விம்மிங், மற்றும் ஜிம் என அவரவர் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் உடற்பயிற்சி தேர்வு செய்து வைத்து கொண்டால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடியும்.
இரவு நேரத்தில் உடற்பயிற்சி செய்பவராக இருந்தால் இதை மாற்றி காலை நேரத்தில் செய்யுங்கள்