Peanuts Benefits: புரதம்.. ஏகப்பட்ட மைக்ரோநியூட்ரியண்ட்ஸ்.. வேர்க்கடலை பயன்கள் கொஞ்சநஞ்சமில்ல பாஸ்..
ஒருவேளை வேகவைத்த மற்றும் வறுத்த வேர்க்கடலை சாப்பிட விருப்பம் இல்லையென்றால், வேர்க்கடலை பிஸ்கட், கடலை மிட்டாய், வேர்க்கடலை சேர்த்த சாக்லேட் போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
Peanuts Benefits in Tamil: வேர்க்கடலையில் புரதம், மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்கள் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் அதிகளவில் உள்ளதால் இதனை நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளும் போது அதிக நன்மைகளை நம்மால் பெற முடிகிறது.
நாம் வெளியூருக்கு செல்லும்போது அனைத்து பேருந்து நிலையங்கள் மற்றும் சாலையோரத்தில் வியாபாரிகள் வேகவைத்த அல்லது வறுத்த வேர்க்கடலையை விற்பனைச் செய்வதை நாம் பார்த்திருப்போம். அதிலும் குறிப்பாக குளிர்காலங்களில் சுட சுட வேர்க்கடலைப்பருப்பினை நாம் வாங்கிச்சாப்பிடும்போது குளிருக்கு இதமாக இருக்கும். அந்த நேரத்திற்கு மட்டும் வேர்க்கடலையை வாங்கி சாப்பிட்டு விடுவோம். ஆனால் அதில் என்ன நன்மைகள் இருக்கிறது என்பதை ஒரு நாளும் நாம் யோசித்து இருக்க மாட்டோம். ஆம் வேர்க்கடலையில் புரதம், மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியண்ட்கள் போன்ற உடலுக்கு நன்மை பயக்கும். பல்வேறு ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதனை நாம் உட்கொள்ளும்போது நம்மை அறியாமலேயே அனைத்து பருவநிலைக்கு ஏற்றவாறு நம் உடல் நலத்திற்கு நன்மையளிக்கிறது.
வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளின் விபரங்கள் | Eating Peanuts Daily Health Benefits
உடல் எடை குறைக்க உதவுகிறது :
உடல் எடையைக் குறைக்க முயற்சிக்க நினைக்கும் அனைவரும் உங்களது உணவில் வேர்க்கடலையை சாப்பிடலாம். அவற்றை நாம் உட்கொள்ளும்போது பசி நமக்கு எடுக்காது. எனவே நாம் அளவாக உட்கொள்ள முடியும்.
புரதம் நிறைந்த வேர்க்கடலை:
நாம் 100 கிராம் அளவிற்கு வேர்க்கடலையை எடுத்துக்கொண்டால் அதில் 25.8 கிராம் புரதம் அதிகளவில் உள்ளது. எனவே புரத ஆதாரமாக இருப்பதால் குளிர்காலத்தில் சாப்பிடுவது கூடுதல் நன்மை பயக்கும்.
இதய ஆரோக்கிய மேம்பாடு:
வேர்க்கடலையை சிற்றுண்டியாக உட்கொள்ளும் போது இதன நோய் பாதிப்பை ஏற்படுத்தும் பல்வேறு காரணிகளைக் கட்டுப்படுத்துகிறது. குறிப்பாக உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கவும் உதவியாக உள்ளது.
இது மட்டுமின்றி சர்க்கரை நோயாளிகள் தங்களது உணவுமுறைகளில் சிறிதளவு வேர்க்கடலையை சாப்பிடலாம். இதில் குறைந்த கிளைசெமிக் குறியீடு உள்ளதால் நீரழிவு நோயாளிகளுக்கு சிறந்த தேர்வாக வேர்க்கடலை அமைகிறது. ஆனால் உடலுக்கு தகுந்தவாறு மிதமாக நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்:
வேர்க்கடலை நமக்கு ஒரே நேரத்தில் பல ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அவை தாதுக்கள், வைட்டமின்கள், புரதம், ஒமேகா -3, ஒமேகா -6, நார்ச்சத்து, தாமிரம், ஃபோலேட், வைட்டமின் ஈ, தயாமின், பாஸ்பரஸ் மற்றும் மெக்னீசியம் ஆகியவை அடங்கி உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு பேருதவியாக உள்ளது.
வேர்க்கடலையில் பல்வேறு உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரக்கூடிய பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் கொஞ்சம் உணவு முறைகளில் நாம் இதனைச்சேர்த்துக்கொள்ள முயற்சிக்கலாம். ஒருவேளை வேக வைத்த மற்றும் வறுத்த கடலை சாப்பிட விருப்பம் இல்லையென்றால், வேர்க்கடலை பிஸ்கட், கடலை மிட்டாய், வேர்க்கடலை சேர்த்த சாக்லேட் போன்றவற்றை நாம் நம்முடைய உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.