மேலும் அறிய

Akshaya Tritiya 2023: அட்சய திருதியை எப்போது? சிறப்புகள் என்னென்ன? செல்வம் செழிக்க செய்ய வேண்டியது என்னென்ன?

Akshaya Tritiya 2023 Date and Time: அட்சய திருதியை வரும் 22-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அட்சய திருதியை(Akshaya Tritiya) ஒரு நன்னாளாக கருதப்படுகிறது. இந்த தினத்தில் தொடங்கப்படும், மேற்கொள்ளப்படும் செயல்கள் அனைத்தும் சிறப்பானதாக அமையும் என்று நம்பப்படுகிறது. இந்த நாளில் லட்சுமியின் அருள் நிறைந்திருக்கும் என்பதால் தங்கம் வாங்குவது மட்டுமல்ல, பிற நல்ல விசயங்களையும் செய்யலாம் என்று கூறப்படுகிறது.

அட்சய திருதியை சிறப்புகள் :

அட்சய திருதியை அல்லது அட்சய் தீஜ் என்றழைக்கப்படும் இந்த நாள் இந்து மற்றும் சமணர்களின் புனித நாளாக கருதப்படுகிறது.  ஆண்டுதோறும் தமிழ் மாதமான சித்திரையில் அமாவாசைக்கு அடுத்து வரும் வளர்பிறையன்று வரும் திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திரிதியை நாள் என நம்பப்படுகிறது.

அட்சய திரிதியில் தங்க நகை வாங்கினால் ஐஸ்வர்யம் பெரும் என்பது ஐதீகம். அதனால் பலரும் அந்த தினத்தன்று நகை வாங்க விரும்பவர். அது வழக்கமாகவும் உள்ளது. தங்கம் மட்டுமல்ல, ஐஸ்வர்யம் தரும் பொருட்கள் எதுவானலும் வாங்காலம். அட்சய என்றால் அழியாதது என்ற பொருளையும் கொண்டுள்ளது. பல சிறப்பு மிகுந்த நன்னாளில் வாழ்வில் செல்வ செழிப்போடு, ஆரோக்கியத்துடம் இருக்க சிறப்பு பூஜைகள் உடன் பிரார்த்தனை செய்வர்.

செல்வம் பெருகும்:

தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் வாங்கினால் செல்வம் பெரும் என்று நம்பப்படுகிறது. பல நன்மைகள் நடக்கும் நாளாகவும் கருதப்படுகிறது. எண்ணங்கள் சிறப்பாக இருந்தால், அப்போது யாவும் நன்மையே என்பதை குறிக்கும் நாளாகவும் இந்த நாள் இருப்பதாகவும் பலரால் கூறப்பட்டுள்ளது. புதிதாக வாகனம் வாங்குதல், வீடு, நகை வாங்குதல் போன்றவைகளை இந்த நாளில் செய்வதற்கு காரணம் அதுதான். அட்சய திருதியை நாளில் எது செய்ய தொடங்கினாலும் அதன் பலன் எப்போதும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்களுக்கு சென்று வழிபடுவது எதிர்மறையான சிந்தனைகளை விலக்கிடும் என்று கூறப்படுகிறது.

அட்சய திருதியை என்பதன் அர்த்தம் என்ன?

அட்சய திருதியை என்பது சம்ஸ்கிருத வார்த்தை. அட்சயா என்றால் வளம், வெற்றி, இன்பம், நம்பிக்கை. திரிதியை என்றால் நிலவின் மூன்றாம் பிறை. இந்த நாளானது இந்து காலண்டரின் படி சித்திரை மாதத்தின் மூன்றாவது சந்திர தினத்தில் வருகிறது.

அட்சய திருதியை எப்போது?

இந்த ஆண்டு அட்சய திரிதியை நாளானது ஏப்ரல் 22 அன்று சனிக்கிழமை கொண்டாடப்பட உள்ளது. அன்றைய தினம் முழுவதும் தொடங்கப்படும் செயல்கள் சிறப்பானதாக அமையும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் இறைவனை முழு மனதோடு வழிபட வேண்டும் என்று ஆன்மீக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

என்னென்ன வாங்கலாம்?

அட்சய திருதியை தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம் என்று கூறப்படுகிறது. அது தங்கம்,வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்களாக இருக்க வேண்டும் என்பதில்லை.  பச்சரிசி,  உப்பு, வெல்லம், ஆகியவற்றையும் வாங்கலாம்.

தானம் தருவது நல்லதா?

அட்சய திருதியை நாளில் தானம் தருவது நல்லதாக என்று கேட்டால், ஆம். நன்மைதான். உணவு தானியங்கள், தண்ணீர் நிறைந்த குடம் உள்ளிட்டவற்றை தானமாக கொடுத்தால் செல்வம் பெருகும் என்று கூறப்படுகிறது. அதோடு, இந்த சிறப்பு நாளில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது என்றும் கூறப்படுகிறது. 

அட்சய திருதியை நாளில்  செய்யக்கூடிய காரியங்கள்.

குழந்தைக்கு அன்னப் பிராசனம் செய்வது.

சங்கீதம், கல்வி, கலைகள் உள்ளிட்ட பயிற்சிகளில் சேரலாம். 

இன்றைய தினத்தில் நல்ல எண்ணத்துடன் மன மகிழ்வுடன் நல்ல செயல்களை தொடங்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Embed widget