Information Today | பச்சை, நீலம், ஆரஞ்சு.. பால் பாக்கெட் வித்தியாசம் தெரிஞ்சுக்கோங்க!
வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பவே பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டும். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த வண்ண முறை. எது என்ன? பார்க்கலாம்.!
இப்போதெல்லாம் பால் என்றாலே பாக்கெட் பால் என்று ஆகிவிட்டது. நகரங்கள் தொடங்கி கிராமங்கள் வரை பால் பாக்கெட் வந்துவிட்டது. எளிதாக தேவைப்படும் போது கடைகளில் சென்று வாங்கிவிடலாம். வீட்டு ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்திக் கொள்ளலாம். அதிக தேவைக்கு வேறு வழியே இல்லாமல் பால் பாக்கெட் மட்டுமே கைகொடுக்கிறது.
நீங்கள் கடைகளுக்கு சென்று பால் பாக்கெட் என்று கேட்டால் என்ன கலர் என்று கடைக்காரர் நிச்சயம் கேட்பார். விவரம் தெரிந்தவர்கள் பச்சை பால் தாங்க, சிவப்பு பால் தாங்க என கேட்டு செல்வதுண்டு. ஆனால் சில ஏதோ ஒரு கலர் தாங்க என கேட்டு செல்வார்கள். ஆனால் இந்த கலர்களுக்கு பின்னால் பெரிய விஷயமே உள்ளது. வீட்டில் உள்ளவர்களுக்கு ஏற்பவே பால் பாக்கெட்டுகளை வாங்க வேண்டும். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் இந்த வண்ண முறை. எது என்ன? பார்க்கலாம்.!
பால் பாக்கெட்டுகளின் வண்ணம் எதனைக் குறிக்கிறது என்றால் கொழுப்புச் சத்தைத் தான். ஒவ்வொரு வண்ண பால்பாக்கெட்டும் கொழுப்புகளின் அளவில் மாற்றத்துடன் இருக்கும். அதற்கு ஏற்பவே அது விற்கப்படுகிறது. அதனால் வயதானவர்கள், நோயாளிகள், குழந்தைகள், கர்ப்பிணிகள் என அவரவர்களுக்கு ஏற்ப பால் பாக்கெட்டை வாங்கலாம்.
நீல நிறம்:
நீல நிற பாலை நைஸ் பால் என்று அழைப்பார்கள். அதற்கு காரணம் இது அனைவருக்கும் ஏற்றது. இது சமன்செய்யப்பட்ட பால் ஆகும். அதாவது மீடியமான கொழுப்பு இதில் உண்டு. அதனால் எளிதில் ஜீரணம் ஆகும். இதனை குழந்தைகள், நோயாளிகள், வயதானவர்கள் என அனைவருமே உட்கொள்ளலாம். 100கிராம் பாலில் 3 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.
பச்சை பால்:
இதில் கொழுப்பு சற்று அதிகம். அதனால் வயதானவர்கள், நோயாளிகள் தவிர்க்கலாம். குறிப்பாக 40 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே எடுத்துக்கொள்ள ஏதுவான பால் என கூறப்படுகிறது. 100 கிராம் பாலில் 4.5 கிராம் கொழுப்பு உள்ளது.
Information Today | தகவல் தெரிஞ்சுக்கோங்க! நெடுஞ்சாலைகளில் செவ்வரளி ஏன் தெரியுமா?
ஆரஞ்சு பால்:
அதிக கொழுப்புச் சத்து கொண்ட பால் தான் இந்த ஆரஞ்சு நிற பால். வயதானவர்களும், நோயாளிகள் என இதனை யாருமே குடிக்க பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. குறிப்பாக நோயாளிகள் இந்த ஆரஞ்சு நிற பால் பாக்கெட் பக்கம் போகாமல் இருப்பது நல்லது. குடிக்கக் கூடாது என்றால் வேறு எதற்கு என்று சந்தேகம் வரலாம். பெரும்பாலும் பால் தொடர்புடைய இனிப்பு பண்டங்கள் செய்ய இந்த பால் வகை பயன்படுத்தப்படுகிறது.
இதனை ஃபுல் க்ரீம் பால் எனக் கூறுவார்கள். அந்த அளவுக்கு கொழுப்பு அதிகம். அடர்த்தியும் அதிகம். 100 கிராம் பாலில் 6 கிராம் கொழுப்பு உள்ளது.
பிங்க் பால்:
பிங்க் பாலை டயட் பால் என்று கூறுவார்கள். இது ஆரோக்கியத்துக்கான பால் என்பார்கள். டயட் இருப்பவர்கள். நோயாளிகள், வயதானவர்கள் இந்த பாலை தேர்ந்தெடுக்கலாம். இதில் கொழுப்பு மிக மிக குறைவு. 100கிராம் பாலில் 1.5கிராம் கொழுப்பு மட்டுமே உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்