Vastu Tips : வீட்டிலிருந்து எதிர்மறை சக்திகள் விலகி ஓடணுமா? வாஸ்து நிபுணர்கள் கொடுக்கும் டிப்ஸ் இவைதான்
வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம்.
வீடு என்பது வெறும் கற்களாலும் மணலாலும் ஆனதல்ல மனிதர்களின் உணர்வுகளால் ஆனது. எங்கு சுற்றினாலும் எல்லோருக்கும் வீடு என்பதுதான் நிம்மதி தரும் இடம். அதனால் வீட்டில் எதிர்மறையான எண்ணம் நெருங்காமல் பார்ப்பது அவசியம். அது மற்றவர்களின் பொறாமை, வயிற்றெரிச்சல், பகை உணர்வு ஆகியனவற்றால் ஏற்படக்கூடும்.
ஏன் எதிர்மறை சக்தியை விலக்கிவைக்க வேண்டும்?
நம் வீட்டினில் எதிர்மறை எண்ணங்கள் இருந்தால் அது நம் உள்ளத்தை, நடத்தையை பாதிக்கும். வாஸ்து தோசம் இருந்தால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் நிலவக் கூடும். அதனால் உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் உருவாகலாம். பொறாமை எண்ணங்கள் மேலோங்கும். எப்போது எப்படி நடந்து கொள்வீர்கள் என்று தெரியாத அளவுக்கு நடக்கலாம். அதனால் எதிர்மறை எண்ணங்களை அகற்ற வேண்டும். வீட்டிலிருந்து எதிர்மறை எண்ணங்களை அகற்ற சில வாஸ்து சாஸ்திரத்தை பின்பற்றலாம்.
உங்கள் வீட்டின் வாயிலை சுத்தமாக வைத்திருங்கள்
வீட்டில் நேர்மறை எண்ணம் நிலைத்து நிற்க எப்போதும் வீட்டின் வாயிலை சுத்தமாக வைத்திருங்கள். சிறு செடிகளை வீட்டின் வாயிலில் வையுங்கள். வீட்டின் முகப்பு எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சரியான நிறத்தை பூசுங்கள்
வீட்டின் உள்ளேயும் வெளியேயும் சரியான நிறத்தை பூசுங்கள். அவ்வாறு செய்வது வீட்டிற்கு ஒரு நேர்மறை சக்தியை தரும். உங்கள் வீட்டிற்கு ஏற்ற நிறத்தைப் பூச நீங்கள் ஒரு வாஸ்து நிபுணரிடம் உரிய ஆலோசனையைப் பெறுவது நல்லது.
வட- கிழக்கு -இள-நீலம்
கிழக்கு -வெள்ளை அல்லது இள-நீலம்
தென்கிழக்கு -இந்த திசை அக்னியுடன் தொடர்புடையது ஆகவே ஆரஞ்சு, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளி நிறங்கள் ஆற்றலை அதிகரிக்க பயன்படுகிறது.
வடக்கு -பச்சை,பிஸ்தா பச்சை.
வடமேற்கு- இந்த பகுதி வாயு உடன் தொடர்புடையது. எனவே, வெள்ளை, இள-சாம்பல் மற்றும் கிரீம் ஆகிய மூன்றும் சிறந்த நிறங்களாக கருதப்படுகின்றன .
மேற்கு -இது “வருணன் (அதாவது நீர்) இடமாகும். எனவே, சிறந்த நிறங்கள் நீலம் அல்லது வெள்ளை ஆகும்.
தென் மேற்கு -பீச், மண் நிறம், பிஸ்கட் நிறம் அல்லது இளம் பழுப்பு.
தெற்கு -சிவப்பு மற்றும் மஞ்சள்.
வீட்டினுள் பொருட்களை அடைத்து வைக்காதீர்கள்
வீட்டினுள் பொருட்களை அடைத்து வைக்காதீர்கள். உடைந்துபோன ஃபர்னிச்சர், வீட்டு உபயோக சாதனங்களை வைத்திருக்கக் கூடாது. அவை எதிர்மறையான சிந்தனையை உருவாக்கும். வீட்டை சுத்தமாக நிறைய ஸ்பேஸ் இருப்பதுபோல் வைக்கவும். நடந்தால் கால் இடிக்கும் படுத்தால் கை இடிக்கும் என்பதுபோல் வைக்காதீர்கள்.
வீட்டில் செடி வையுங்கள்:
வீட்டில் செடி வைக்கலாம். லக்கி பேம்பூ, மனி ப்ளான்ட் போன்ற செடிகள் வைக்கலாம். இந்த மாதிரியான செடி வைக்கலாம். இவை வீட்டிலிருந்து எதிர்மறை எண்ணங்களை விதைக்கும்.
வீட்டில் நறுமணம் வீசும் பொருட்களை வைக்கவும். சுத்தமான வீடு நறுமணமான வீடு மிகவும் முக்கியம்.
இந்த விஷயங்களை பிரபல வாஸ்து நிபுணர்களும், வாழ்வியல், தியான ஆசிரியர்களும் வலியுறுத்துகிறார்கள்
இதில் எதுவும் அறிவியல்பூர்வமானதல்ல..