Cold and Cough Children : குழந்தைகளுக்கு ஏற்படும் சளி தொந்தரவை தடுக்க எளிய வழிமுறைகள்..
குழந்தைகளுக்கு லேசான சளி தொந்தரவுகள் இருக்கும் சமயத்தில், வீட்டு மருத்துவத்திலேயே சளி தொந்தரவுகளில் இருந்து தவிர்க்க முடியும்
லேசான சளி பிடித்துக் கொண்டால், மருந்து சாப்பிடும் போது ஏழு நாட்களில் குணமாகும் என்றும், மருந்து சாப்பிடாமல் விட்டால், ஒரு வாரத்திலும் சரியாக போய்விடும் என்று வேடிக்கையாக சொல்லுவார்கள்.
பெரியவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் சமாளிக்கும் திறனும் இருப்பதினால் கவலையில்லை. ஆனால் குழந்தைகளுக்கு வளரும் காலங்களில்,நோய் எதிர்ப்பு சக்தி அவ்வளவாக இருக்காது. குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு,நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும். பழந்தமிழர் வாழ்வியலில் இருக்கும்,பாட்டி வைத்தியம் என்று சொல்லப்படும், வீட்டு மருத்துவத்திலேயே உங்கள் குழந்தைக்கான சளி தொந்தரவுகளில் இருந்து அவர்களை பாதுகாக்க முடியும்.
தேன் கொடுங்கள்:
தேனானது உள் உறுப்புகளில் இருக்கும் புண்களை ஆற்றும் தன்மைகொண்டது. ஆகவே உங்கள் குழந்தையின் தொண்டையில் இருக்கும் கரகரப்பை போக்க, குழந்தைக்கு தேனை கொடுங்கள். ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தை எனும் போது,தேனில் மிகச்சிறிய அளவு சுண்ணாம்பை கலந்து, தொண்டை முழுவதும் பற்று போடுங்கள். இது சளியை வெகுவாக குறைக்கும் ஒரு வழியாகும்.
பூண்டு மஞ்சள் மற்றும் மிளகு கலந்த பால்:
பருவநிலை மாற்றம் வரும் சமயங்களில்,குழந்தைகளுக்கு திடீரென சளி பிடித்து விடும். அத்தகைய நேரத்தில்,அவர்களின் வயதிற்கு ஏற்றார் போல,மஞ்சள், பூண்டு மற்றும் மிளகு கலந்த பாலை தயாரித்துக் கொடுங்கள். இரண்டு வயதுக்கு மேல் 6 வயதிற்குள் இருக்கும் குழந்தைகளுக்கு,ஒரு பல் பூண்டு, ஒரு மிளகு,சிறிதளவு மஞ்சள் பொடி என மூன்றையும் நன்றாக அரைத்து, கொதிக்கும் பாலில் விட்டு, நன்றாக கொதி வந்த பிறகு, சிறிது தேன் கலந்து, உங்கள் குழந்தைக்கு, அவ்வப்போது புகட்டி வாருங்கள். இது, அவர்களுக்குள் இருக்கும் சளியை கட்டுப்படுத்தி,குணப்படுத்திவிடும். பெரியவர்களாக இருக்கும்போது, பூண்டு,மஞ்சள்,மிளகு மற்றும் பால் ஆகியவற்றில் அளவை, நீங்கள் அதிகரித்துக் கொள்ளலாம். வாயு கோளாறு அல்சர் மற்றும் அஜீரண பிரச்சனைகள், குழந்தைகளுக்கு அல்லது பெரியவர்களுக்கு இருந்தால் கட்டாயம் இந்த பானத்தை குடிக்க கொடுக்கும் சமயத்தில்,அவர்கள் ஏதாவது சாப்பிட்ட பிறகு இதை தரும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சளி பிடித்த காலத்தில் குழந்தைகளுக்கு, அதிகமான தண்ணீர் குடிக்கக் கொடுங்கள்:
சளி மற்றும் சிறிதளவு ஜுரம் இருக்கும் சமயங்களில்,உடலின் நீர் சத்தானது வெகுவாக குறைந்து விடும்.இது அவர்களை மற்ற நோய்களுக்கு இட்டுச் செல்லும். ஆகவே சளி பிடித்திருக்கும் காலங்களில்,குழந்தைகளுக்கு அவ்வப்போது,வெதுவெதுப்பான நீரை கொடுத்துக் கொண்டே இருங்கள்.இது அவர்களுக்கு புத்துணர்வை தரும்.
வெற்றிலை அல்லது கற்பூரவள்ளி தாருங்கள்:
உடலில் இருக்கும் சளியை சரி செய்யும் தன்மையானது,வெற்றிலை மற்றும் கற்பூரவள்ளி இரண்டிற்கு உண்டு.ஆகவே உங்கள் குழந்தையின் வயதிற்கு ஏற்றார் போல, இந்தப் பொருட்களில் ஏதேனும் ஒன்றை அவர்களுக்கு கொடுங்கள். இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தால் வெதுவெதுப்பான சுடுநீரில் இரண்டு அல்லது மூன்று துளிகள் வெற்றிலை அல்லது கற்பூரவள்ளி சாற்றினை வளர்ந்து வருகை கொடுங்கள்.
இவ்வாறாக உங்கள் வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு லேசான சளி தொந்தரவுகள் இருக்கும் சமயத்தில் மட்டுமே, வீட்டில் கிடைக்கும் இத்தகைய உணவுப் பொருட்களைக் கொண்டு, அவர்களில் சளியை சரி செய்யலாம். ஒரு வேலை அளவுக்கு அதிகமாக சளி பிடித்திருந்தால்,மூச்சு பிரச்சனைகள் இருந்தால், சிரமப்பட்டால், நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகுவது சாலச் சிறந்தது. மேலும் இந்த குறிப்புகள் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கானது. 5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் சளி தொந்தரவுக்கு மருத்துவரை அணுகவும்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )