மேலும் அறிய

Wipro Recruitment : இன்ஜினியரிங் பட்டதாரிகளா? அடிச்சது ஜாக்பாட்.. விப்ரோ நிறுவனத்தில் குவிந்த வேலைவாய்ப்புகள்.. இத படிங்க முதல்ல..

சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களும்,  இறுதியாண்டு பயிலும் மாணவர்களும்  விப்ரோ போன்ற  பெரிய நிறுவனங்களில் பணியில் சேர முடியும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

நாட்டின் முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவையாக விப்ரோவில் ( WIPRO) Graduate Engineer Trainee, Service Desk Analyst, Developer போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே  ஆர்வமும், தகுதியும் உள்ள பட்டதாரிகள் உடனடியாக விண்ணப்பித்துக்கொள்ளவும்

இன்றைக்கு வளர்ந்துவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு பல்வேறு ஐடி நிறுவனங்கள் பல வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றனர். குறிப்பாக கொரோனா தொற்றிற்கு பிந்தையக் காலக்கட்டத்தில் நாட்டின் சேவைத்துறைகள் வளர்ச்சிப்பாதையை நோக்கி செல்கின்றது. குறிப்பாக 2022 பிப்ரவரியில் இந்தியாவின் ஒட்டு மொத்த ஏற்றுமதி (வணிகம் மற்றும் சேவைகள் இணைந்தது) 57.03 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதுசென்ற ஆண்டு இதே காலத்தை விட 25.41 சதவீதம் அதிகமாகும். இதோடு  இரண்டாம் அடுக்கு, மூன்றாம் அடுக்கு நகரங்களில் ஐடி மையங்களை தொடங்க ஐடி தொழில் நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.  இது ஏராளமான வேலைவாய்ப்புகளை வழங்குவதுடன், அந்தப் பகுதி வளர்ச்சிக்கும் பெருமளவில் உதவும் என்றும் கூறப்படுகிறது. தற்போது, அனுபவமிக்க விண்ணப்பதாரர்களை விட, புதியவர்களைப் பணியமர்த்துவதில் விப்ரோ,டிசிஸ், சிடிஎஸ் போன்ற ஐடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

இந்நிலையில் தான் 2022 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையில் புதியவர்களை பணியமர்த்தும் எண்ணிக்கை சென்ற ஆண்டு இதே காலத்தை விட 30  சதவீதம் அதிகமாக இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கும் நிலையில் தற்போது விப்ரோ நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  எனவே இந்நேரத்தில் இப்பணிக்கு விண்ணப்பிக்க என்னென்னத் தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

  • Wipro Recruitment : இன்ஜினியரிங் பட்டதாரிகளா? அடிச்சது ஜாக்பாட்.. விப்ரோ நிறுவனத்தில் குவிந்த வேலைவாய்ப்புகள்.. இத படிங்க முதல்ல..

WIPRO நிறுவனப்பணிக்கானத் தகுதிகள்:

பணியிட விபரம் மற்றும் கல்வித்தகுதி:

Graduate Engineer Trainee

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் இப்பணிக்குத் தொடர்புடைய துறைகளில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Service Desk Analyst

இப்பணிக்கு விண்ணப்பிக்கம் விண்ணப்பதாரர்கள் எந்த துறையை சார்ந்த பொறியியல் பட்டதாரிகளும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

Developer

கணினி அறிவியல் அல்லது அது தொடர்புடைய துறைகளில்  பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

WIPRO நிறுவனப்பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க முதலில், https://www.wipro.com/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

பின்னர் முகப்பு பக்கத்தில் உள்ள 'Career' என்ற ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.

அப்பக்கத்தில் உள்ள ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்புகள் மற்றும் விதிமுறைகளை இப்பகுதியில் காணலாம்.

இதனையடுத்து நீங்கள் எப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ? அதனைத் தேர்வு செய்ய வேண்டும்.

பின்னர் அப்பகுதியில் உள்ள விண்ணப்பத்தில் கேட்கப்பட்டிருக்கும் கல்வித்தகுதி, வயது, கணினி சார்ந்த அறிவு, இருப்பிடம், உடற்தகுதி, சான்று ஆவணங்கள், சமீபத்தில் எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைபடம், மின்னஞ்சல் முகவரி போன்ற இதர பொது விபரங்களை பூர்த்தி செய்துக்கொள்ள வேண்டும்.

இறுதியில் நீங்கள் குறிப்பிட்டுள்ள அனைத்து விபரங்களையும் சரியாக உள்ளதா? என்பதை ஒரு முறை சரிப்பார்த்துக்கொண்டு ஆன்லைன் வாயிலாக அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் அனுப்பவேண்டிய கடைசி தேதி:

தற்போது ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை.  இப்பணியிடங்களுக்கு சமீபத்தில் கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்களும்,  இறுதியாண்டு பயிலும் மாணவர்களும்  விப்ரோ போன்ற  பெரிய நிறுவனங்களில் பணியில் சேர முடியும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எனவே ஆர்வமுள்ள இளைஞர்கள் உடனடியாக இப்பணிக்கு விண்ணப்பித்துப்பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget