Indian Railway Apprenticeship : மேற்கு மத்திய இரயில்வே துறையில் அப்ரண்டிஸ் வாய்ப்பு; எப்படி விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!
Indian Railway Apprenticeship : இரயில்வே துறையில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சி வாய்ப்புக்கான விவரம்.
Indian Railway Apprenticeship : இந்திய இரயில்வே துறையில் உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேற்கு மத்திய ரயில்வேயில் தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்) பயிற்சியின் கீழ் 2,521 பணியிடங்களுக்கான பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பெயிண்டர், மரவேலை செய்யும் பயிற்சி, பிட்டர், எலக்ட்ரிசியன், டீசல் மெக்கானிக், வெல்டர்,வொயர்மேன் உள்ளிட்ட பல துறைகளில் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
மேற்கு மத்திய ரயில்வே பணி விவரம்:
தொழில்பழகுநர் (அப்ரண்டிஸ்)
மொத்த இடங்கள்: 2521
கல்வித் தகுதி:
இந்தப் பயிசிற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ள பிரிவில் ஐ.டி.ஐ. முடித்து சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 15 வயது முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் நபர்களின் மதிப்பெண்கள், சான்றிதழ்கள் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மெரிட் லிஸ்ட் தயாரித்து அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்:
தொழில்பழகுநர் பயிற்சிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவினர் ரூ.100 கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியலின பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்ப கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு முன்பு, அறிவிப்பில் கொடுக்கப்படுள்ள வரைமுறைகள் நன்கு படித்துவிட்டு அதற்கேற்றவாறு கட்டணத்தை செலுத்தவும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மேற்கு மத்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணைதளமான https://iroams.com/RRCJabalpur/applicationAfterIndex அல்லது www.indianrailways.gov.in என்ற லிங்கை பயன்படுத்தி விண்ணப்பிக்கவும்.
https://iroams.com/RRCJabalpur/pdfs/Act%20Apprrentice%20Notification%2003_2022_final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பின் முழு விவரத்தை காணலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.12.2022
மேலும் வாசிக்க..
சமந்தாவின் மயோசிட்டிஸ் நோய்க்கு மஞ்சள்...மீன்... - மருத்துவர்கள் பரிந்துரை என்ன?
SAIL Recruitment : இந்திய ஸ்டீல் ஆணையத்தில் வேலை; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? விவரம் இதோ!