சமந்தாவின் மயோசிட்டிஸ் நோய்க்கு மஞ்சள்...மீன்... - மருத்துவர்கள் பரிந்துரை என்ன?
தசைகளில் கடுமையான வலி, பலவீனம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதை மிகவும் கடினமாக்குகிறது
நடிகர் சமந்தா ரூத் பிரபு கடந்த மாதம் மயோசிட்டிஸ் என்னும் நோயுடன் தனது போராட்டத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருந்தார். நோயாளியின் தசைகளில் உள்ள நோயெதிர்ப்பு மண்டலத்தில் ஏற்படும் இந்த ஆட்டோ இம்யூன் நோய் மிகவும் வேதனையானது. மயோசிடிஸ் தசைகளில் கடுமையான வலி, பலவீனம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொள்வதை மிகவும் கடினமாக்குகிறது. சமந்தா தற்போது ஐதராபாத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் சிகிச்சைகளை எடுத்துக்கொள்கிறார், மேலும் அவரது உடல்நிலைக்கு ஆயுர்வேத மருந்துகளையும் தேடுகிறார். சமந்தாவின் உடல்நிலை மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவிய நிலையில், அவரது செய்தித் தொடர்பாளர் அதை மறுத்துள்ளார்.
மயோசிடிஸ் என்றால் என்ன?
பல்வேறு வகையான மயோசிடிஸ் உள்ளன, ஒவ்வொன்றும் தனித்தனியே அறிகுறிகளைக் கொண்டவை. மயோசிடிஸில் மிகவும் பொதுவான வகை, பாலிமயோசிடிஸ் ஆகும், இது தசை பலவீனம் மற்றும் வீக்கத்தால் வகைப்படுத்தப்படுகிறது. இது தவிர மயோசிடிஸ் டெர்மடோமயோசிடிஸ் மற்றும் பாடி மயோசிடிஸ் ஆகியவையும் அடங்கும்.
"ஆட்டோ இம்யூன் கோளாறுகள், தொற்று, அதிர்ச்சி மற்றும் சில மருந்துகள் உட்பட பல்வேறு காரணிகளால் மயோசிடிஸ் ஏற்படலாம். மயோசிடிஸிற்கான சிகிச்சையானது அடிப்படை காரணத்தைப் பொறுத்தது. சில சமயங்களில், சிகிச்சையானது ஸ்டெராய்டுகள் அல்லது பிற நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்துகளை உள்ளடக்கியிருக்கலாம். உடல் சிகிச்சை மற்றும் உடற்பயிற்சி ஆகியவை இதற்கான சிகிச்சையின் முக்கிய கூறுகள்" என்கின்றனர் நிபுணர்கள்.
ஆயுர்வேதமும் யோகாவும் மயோசிடிஸை குணப்படுத்த முடியுமா?
மயோசிடிஸ் நோய்க்கு ஆயுர்வேத மற்றும் யோகா சிகிச்சை கைகொடுக்கும். மயோசிடிஸ் என்பது தசைகளின் வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிலை. இந்த வலி மிகவும் வேதனையானதாக இருக்கும். ஆயுர்வேதம் மற்றும் யோகா ஆகிய இரண்டும் இதற்கான இயற்கையான, முழுமையான சிகிச்சைமுறைகள் ஆகும். மேலும் அவை மயோசிடிஸ் சிகிச்சைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மயோசிடிஸுக்கு பல வேறுபட்ட ஆயுர்வேத வைத்தியங்கள் உள்ளன. இவற்றில் ஒன்று மஞ்சள், இது ஒரு சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு மூலிகையாகும். நீங்கள் மஞ்சளை காப்ஸ்யூல் வடிவில் எடுத்து அல்லது பேஸ்ட் செய்து உடலில் பூசலாம். பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக இஞ்சி, போஸ்வெல்லியா மற்றும் அஸ்வகந்தா ஆகியவற்றை தடவலாம். மயோசிடிஸால் உண்டாகும் வலி மற்றும் வீக்கத்தைப் போக்க யோகா ஒரு சிறந்த வழியாகும்.
ஆயுர்வேத சிகிச்சை முறையின்படி மயோசிடிஸ் வாத (காற்று), பித்த (நெருப்பு) மற்றும் கபா (பூமி) ஏற்றத்தாழ்வு காரணமாக ஏற்படுகிறது.
"மயோசிடிஸிற்கான ஆயுர்வேத சிகிச்சையானது உணவுமுறை மாற்றங்கள், வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் மூலிகை வைத்தியம் மூலம் மேலே குறிபிட்ட மூன்றின் சமநிலையை மீட்டெடுப்பதை உள்ளடக்கியது. கேஃபைன், ஆல்கஹால், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பிற தூண்டுதல் பொருட்களைத் தவிர்ப்பது வீக்கத்தைக் குறைக்க உதவும். மயோசிடிஸின் அறிகுறிகள் தென்பட்டால் சமைத்த காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதம் போன்ற அடிப்படை உணவுகளை சாப்பிடுவது உதவியாக இருக்கும்" என்று நிபுணர் கூறுகிறார்.
மயோசிடிஸ் உள்ளவர்கள் மீன், பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )