![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
UPSC NDA Exam 2022: 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் வேலை.. இதுதான் விவரம்!
யுபிஎஸ்சி நடத்தும் பாதுகாப்பு அகாடமி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க வரும் ஜனவரி மாதம் 11ஆம் தேதி கடைசி நாள்.
![UPSC NDA Exam 2022: 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் வேலை.. இதுதான் விவரம்! UPSC NDA Exam 2022: 400 vacancies, Check Notification, last date, eligibility other details UPSC NDA Exam 2022: 12ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. ராணுவம், கப்பற்படை, விமானப்படையில் வேலை.. இதுதான் விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/06/b5ea30863614d90f4c39232be58790bf_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணயமான யுபிஎஸ்சி பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் தேசிய கப்பல்படை அகாடமியில் படித்து பணிபுரியும் இடங்களுக்கு யுபிஎஸ்சி தேர்வு நடத்தி வருகிறது. இந்தாண்டிற்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பாணையை யுபிஎஸ்சி கடந்த மாதம் வெளியிட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் வரும் ஜனவரி 11ஆம் தேதியாகும்.
இந்த அறிவிப்பின் படி உள்ள காலியிடங்கள்,
தேசிய பாதுகாப்பு அகாடமி:
ராணுவம்: 208 காலியிடங்கள்(10 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
கப்பற்படை:42 காலியிடங்கள்(03 இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது)
விமானப்படை: பறக்கும் பணி- 92 காலியிடங்கள்(02 இடங்கள் பெண்களுக்கு)
தொழில்நுட்ப பணி- 18 காலியிடங்கள்(02 இடங்கள் பெண்களுக்கு)
பிற பணிகள்: 10 காலியிடங்கள்(02 இடங்கள் பெண்களுக்கு)
தேசிய கப்பற்படை அகாடமி: 30 காலியிடங்கள்(பெண்களுக்கு ஒரு இடமும் இல்லை)
இந்த காலிபணியிடங்களுக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் யுபிஎஸ்சியின் இணையதளத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாள் வரும் ஜனவரி மாதம் 11ஆம் தேதி ஆகும்.
தேர்விற்கான தகுதி:
இந்தத் தேர்விற்கு திருமணமாக ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்க 12 வகுப்பு மற்றும் முடித்திருந்தால் போதும். இந்த ஆண்டு 12வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நபர்களும் இந்தத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்விற்கான நுழைவு கட்டணம்: தேர்விற்கான நுழைவு கட்டணம் 100 ரூபாய். எஸ்சி/எஸ்டி பிரிவினர் மற்றும் மகளிர்களுக்கு நுழைவு கட்டணம் எதுவுமில்லை.
இந்தத் தேர்வில் கணிதம் மற்றும் பொது தாள் பாடங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த இரண்டு தாள்களுக்கும் தலா 2 ½ மணி நேரம் கால அவகசமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வில் மொத்தமாக 900 மதிப்பெண்கள் உள்ளன. அவற்றில் கணிதப் பாடத்திற்கு 300 மதிப்பெண்களும், பொதுப்பாடத்திற்கு 600 மதிப்பெண்களும் உள்ளன. இந்தத் தேர்வில் தவறான விடைகளுக்கு நெகட்டிவ் மார்க்கிங் முறையும் உள்ளது. ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடைபெறும் இந்தத் தேர்வின் முடிவுகள் வரும் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:ESIC சென்னை மண்டலத்தில் 385 காலிப்பணியிடங்கள்..விண்ணப்பிக்க பிப்.15 கடைசி தேதி!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)