ESIC சென்னை மண்டலத்தில் 385 காலிப்பணியிடங்கள்..விண்ணப்பிக்க பிப்.15 கடைசி தேதி!
ESIC Chennai Recruitment 2022: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாார்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வு என இரு பகுதிகளாக இத்தேர்வானது நடைபெறும்.
சென்னை இஎஸ்ஐயில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பன்முக உதவியாளர் என 385 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
தொழிலாளர் அரசு காப்பீட்டுத் திட்டம் என்பது சமூகப்பாதுகாப்புடன் ஒருங்கிணைந்த பல்நோக்கு நலத் திட்டமாகும். இதன் மூலம் தொழிலாளர் அரசு காப்பீட்டுச் சட்டத்தின் கீழ், விவரிக்கப்பட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு அவ்வப்பொழுது நேரிடும் உடல்நலக் குறைபாடு, பெண் தொழிலாளர்களுக்கான மகப்பேறு, வேலை செய்யும் போது விபத்தினால் ஏற்படும் தற்காலிகமான அல்லது நிரந்தரமான ஊனம் மற்றும் மரணம் போன்ற அனைத்திற்கும் உரிய மருத்துவச்சேவை வழங்கிறது. இதனை நிர்வகிக்க பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் தற்போது தொழிலாளர் அரசு காப்பீட்டு நிறுவனத்தின் சென்னை மண்டலத்தில் காலியாக உள்ள முதுநிலை எழுத்தர், சுருக்கெழுத்து தட்டச்சர், பன்முக உதவியாளர் என 385 பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இதற்கான தகுதி என்ன? விண்ணப்பிக்கும் முறை ? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
ESIC சென்னை மண்டல காலிப்பணியிட விபரங்கள்:
முதுநிலை எழுத்தர்
காலிப்பணியிடங்கள் – 150
கல்வித்தகுதி – அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு- 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவினராக இருப்பின் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் – மாதம் ரூ.25,500 முதல் 81,100 வரை
சுருக்கெழுத்து தட்டச்சர் (STENO-TYPIST பணிக்கானத் தகுதிகள்:
காலிப்பணியிடங்கள் – 16
கல்வித்தகுதி -விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு, தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு - 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவினராக இருப்பின் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : ரூ. 25,500 – 81,100
பன்முக உதவியாளர் (MULTI TASKING STAFF) பணிக்கானத் தகுதிகள்
காலிப்பணியிடங்கள் – 219
கல்வித்தகுதி – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு- விண்ணப்பதாரர்கள் 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்சி பிரிவினராக இருப்பின் 5 ஆண்டுகளும், ஒபிசி பிரிவினருக்கு 2 ஆண்டுகளும் தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
சம்பளம் : மாதம் ரூ. 18,000 – 56,900
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://www.esic.nic.in/recruitments என்ற இணையதளத்தின் வாயிலாக வருகின்ற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம் :
எஸ்சிமற்றும் எஸ்டி பிரிவு பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு ரூ.250.
பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாார்கள் எழுத்துத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
முதல்நிலை மற்றும் முதன்மைத்தேர்வு என இரு பகுதிகளாக இத்தேர்வானது நடைபெறும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை, https://www.esic.nic.in/attachments/recruitmentfile/8b3b8e968fff07db540d4312dc05be63.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம்.