Job Alert : தற்காலிக செவிலியர் பணியிடங்கள்; மாத ஊதியம் எவ்வளவு? விவரம் இதோ!
தென்காசியில் உள்ள வேலை குறித்த அறிவிப்பு.
தென்காசி மாவட்டத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 10 தற்காலிக செவிலியர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடபப்ட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குகுறிப்பின் விவரம்:
பணி விவரம்:
செவிலியர்
கல்வித் தகுதி:
செவிலியர் பட்டயபடிப்பு (DGNM)அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.sc Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் ஆகியவைகள் பெற்றிருக்க வெண்டும்.
ஊதிய விவரம்:
மாதம் ரூ. 18 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படுகிறது.
இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது. எந்த ஒரு காலத்திலும் பணிநிரந்தரம் செய்யப்பட மாட்டாது. கொரோனா காலத்தில் பணிபுரிந்த செவிலியர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்தவர்கள் அனுபவ சான்றிதழ் இணை இயக்குநர் சான்றொப்பத்துடன் சமர்ப்பிக்கவும்.
விண்ணப்பிப்பது எப்படி?
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி:
செயலாளர், மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி
விண்ணப்பிக்க கடைசி நாள் ; 27.01.2023 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
அறிவிப்பின் கூடுதல் விவரம் அறிய, https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2023/01/2023010996.pdf