மேலும் அறிய

தஞ்சாவூர் ராணுவ மருத்துவமனையில் பல்வேறு காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்க பிப்.25 கடைசி தேதி!

தஞ்சாவூர் ராணுவ மருத்துவமனைக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், இப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தஞ்சாவூர் மாவட்ட ராணுவ மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள நபர்கள் வருகின்ற பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.

இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஆயுதப்படை பணியாளர்கள், ராணுவக்குழுக் காப்பீடு மற்றும் ஆயுதப்படை குழுக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நோய்களுக்காக குறிந்த செலவில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளும் வகையில், முன்னாள் ராணுவ மருத்துவமனை செயல்பட்டுவருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட முன்னாள் ராணுவ மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர், மருந்தாளுனர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படும் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே அறிந்துக்கொள்வோம்.

மருத்துவ அலுவலர் (Medical Officer) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் : 1

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் எம்பிபிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் – மாதம் ரூபாய் 75 ஆயிரம்

பல் மருத்துவ அலுவலர் (Dental Officer) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள்: 1

கல்வித்தகுதி: இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிடிஎஸ் படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.75,000 என நிர்ணயம்

செவிலியர் உதவியாளர் (Nursing Assistant) பணிக்கானத் தகுதிகள்:

காலிப்பணியிடங்கள் – 1

கல்வித்தகுதி: விண்ணப்பதாரர்கள் Diploma/ Class 1 Physiotherapy courses படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.28,100 என நிர்ணயம்.

மருந்தாளுனர் (Pharmacist) பணிக்கானத் தகுதிகள்:

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி : விண்ணப்பதாரர்கள் Diploma in Pharmacy or Degree in Pharmacy படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.28,100

ஆய்வக உதவியாளர் (Lab Assistant) பணிக்கானத் தகுதிகள்:

காலியிடங்கள்:1

கல்வித்தகுதி : விண்ணப்பத்தாரர்கள் DMLT படித்து முடித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ.28,100

காவலர் மற்றும் துப்புரவுப்பணியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சிப்பெற்றிருக்க வேண்டும் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு தமிழில் எழுத,படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : மாதம் ரூபாய்16,800

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ள நபர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், தங்களது சுய விபரங்கள் அடங்கிய விண்ணப்பத்தை தயார் செய்ய வேண்டும். பின்னர் இப்பணிக்கு தேவையான அனைத்து ஆவணங்களுடன் கீழ்க்கண்ட முகவரியில் பிப்ரவரி 25 ஆம் தேதிக்குள் அனுப்பிவைக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

SO ECHS (ECHS Cell),

Air Force Station,

Pudukkottai Road,

Thanjavur – 613005.

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், இப்பணியிடங்களுக்கு நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இப்பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
ABP Premium

வீடியோ

OPS ADMK Alliance | TTV-க்கு பாஜக கொடுத்த TASK! கூட்டணிக்கு வருகிறாரா OPS? குக்கர் சின்னத்தில் போட்டி?
Maharashtra Police | ”அம்பேத்கரையே மதிக்கல என் வேலை போனாலும் பரவால” பாஜக அமைச்சர் vs பெண் POLICE
MK Stalin Warns KO Thalapathi |
Ramadoss vs DMK | திருமாவுக்காக கைவிரித்த திமுக! குழப்பத்தில் ராமதாஸ்! சைலண்டாக இருக்கும் விஜய்
Jothimani |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
OPS: வாசல் திறந்திருக்கிறது.. அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்? கிரீன் சிக்னல் கொடுத்தாரா இபிஎஸ்?
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?
India EU Trade Deal: தடையில்லா வர்த்தக ஒப்பந்தம்..! இந்தியாவிற்கு பெரிய ஜாக்பாட்டா? அமெரிக்கா இழந்தது என்ன?
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
Mahindra Offers: 4 லட்சம் தள்ளுபடி.. XUV 3XO முதல் Thar வரை.. ஆஃபர்களை வாரி வழங்கிய மஹிந்திரா!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
கூட்டணிக்கட்சியினர் பற்றி பொதுவெளியில் பேசக்கூடாது.. தொண்டர்களுக்கு திமுக தலைமை உத்தரவு!
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
வாக்காளர் பட்டியலில் குளறுபடி: கொத்தாக மாயமான இஸ்லாமியர்கள் பெயர்கள்...பரபரப்பு...
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
ராமதாசுக்கு விஜய்யுடனும் கூட்டணி வைக்க சிக்கல்?‌ ராமதாஸ் நிலை என்ன? அரசியல் களத்தில் பரபரப்பு!
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
நாம் இணைந்து தயாரிக்கும் தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்... எம்.பி., கனிமொழி உறுதி
American Warship Iran Houthi : நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
நெருங்கிய அமெரிக்க போர்க்கப்பல்; கண்டுபிடிக்க முடியாமல் திணறும் ஈரான்; மிரட்டும் ஹவுதி, ஹெஸ்பொல்லா
Embed widget