Job Alert: மாவட்ட வேலைவாய்ப்பு; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!
Job Alert: தூத்துக்குடியில் உள்ள வேலைவாய்ப்பு தகவல்களை இங்கே காணலாம்.
![Job Alert: மாவட்ட வேலைவாய்ப்பு; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்! TamilNadu State Rural Livelihood Mission Thoothukudi Job Coordinator Check Details Job Alert: மாவட்ட வேலைவாய்ப்பு; மகளிர் மட்டும் விண்ணப்பிக்கலாம் - முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/22/d81855f1e5414be6764c92cf4be77fce1697966763022333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தூத்துக்குடி மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவில் உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது, இதற்கு விண்ணப்பிக்க வரும் 25-ம் தேதி கடைசி நாளாகும்.
பணியிட விவரம்
வட்டார ஒருங்கிணைப்பாளர்
கல்வித் தகுதி
இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு, எம்.எஸ். ஆபிஸ் தெரிந்திருக்க வேண்டும்.
மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஊதிய விவரம்
இது ஒப்பந்தம் அடிப்படையிலான பணி என்பதால் மாத தொகுப்பூதியமாக ரூ.12,0000 வழங்கப்படும்.
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு பெறப்படும் விண்ணப்பங்களில் இருந்து தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய முறை
கல்வித் தகுதி, கணினி பயிற்சி பெற்றதற்கான சான்று முன்னுரிமை சான்று ஆகியவற்றின் நகல்களை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை அஞ்சல் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
இணை இயக்குநர் / திட்ட இயக்குநர்
தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம்
மாவட்ட இயக்க மேலாண்மை பிரிவு
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம்
கோரம்பள்ளம்
தூத்துக்குடி - 628101
விண்ணப்பிக்க கடைசி தேதி - 25/10/2023
விளையாட்டு வீரரா? அரசு வேலை காத்திருக்கு..
சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தை இங்கே காணலாம். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2018 ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை 10சி ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF -ன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 10சி -ல் அங்கீகரிக்கப்பட ISF கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்...
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இதற்கு அனைத்து தகுதிகளுடன், 40 வயதிற்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,.
இதற்கு இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)