Job Alert: வேலை தேடுவோர்களின் கவனத்திற்கு... பத்தாவது தேர்ச்சி போதும் - முழு விவரம்!
Job Alert: ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு அருகே உள்ள அருள்மிகு சோழீஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பணி விவரம்:
அர்ச்சகர்
சீட்டு விற்பனையாளார்
இரவுக்காவலர்
திருவலகு
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
அர்ச்சர் பணிக்கு தமிழில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
சமய நிறுவனங்கள் அல்லது ஏனைய யாதொரு நிறுவனங்கள் நடத்துகின்ற ஏதேனும் ஆகமப்பயிற்சி மையத்தில் தொடர்புடைய பிரிவில் ஓராண்டு பயிற்சிக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சீட்டு விற்பனையாளர் பணிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித்தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.
இரவுக்காலவர், திருவலகு பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது நிரம்பியவராகவும் 35 வயதுக்குப்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
ஊதிய விவரம்:
அர்ச்சகர் - ரூ.3000
சீட்டு விற்பனையாளார் - ரூ.3,100 -9,300
இரவுக்காவலர் - ரூ.2300 - 7400
திருவலகு -ரூ.2300 -7400
இந்தப் பணி தொகுப்பூதியம் அடிப்படையிலானது என்றும், இதர விபவரங்களை கோயில் அலுவலகத்தில் அலுவலக நாட்களில் அலுவலக நேரங்களில் நேரடியாக கேட்டுத் தெரிந்துக்கொள்ளாலம் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு தேவையான ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
செயல் அலுவலர்,
அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில்.
ஈரோடு - 638 001
தொடர்புக்கு - 0424 - 2214421
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.06.2023
இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/1rAEdjoxl0l1sqDTiFo9hYUp-7NYixGph/view- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
TN Schools Reopening: மாணவர்களே... பள்ளிகள் திறப்பு ஜூன் 12-க்கு மீண்டும் தள்ளிவைப்பு; விவரம்