SBI CBO 2025: ரூ.48 ஆயிரம் முதல் சம்பளம்; 3,223 காலி இடங்கள்; எஸ்பிஐயில் சேரலாம் – எப்படி?
SBI CBO Recruitment 2025: தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும். இத்துடன் இதர சலுகைகளும் அளிக்கப்படும்.

இந்திய ஸ்டேட் வங்கியில் சர்க்கிள் அடிப்படையிலான அதிகாரிகள் (Circle Based Officers - CBO) பணிக்கு விண்ணப்பிக்க, விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. தேர்வர்கள் இந்தப் பணிக்கு மே 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
இதற்கு 3,323 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வு, ஸ்கிரினீங், நேர்காணல் மற்றும் உள்ளூர் மொழிப் புலமைத் தேர்வு மூலம் இந்தப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்க என்ன தகுதி?
எந்தப் பல்கலைக்கழகத்துக்கு என்றாலும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டத்தைப் பெற்றிருந்தால் போதும். மருத்துவம், பொறியியல், சிஏ என்ன எந்தப் படிப்பை முடித்தவர்கள் என்றாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
21 முதல் 30 வயது வரையிலான நபர்களாக தேர்வர்கள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
- பொது/ ஓபிசி/ இடபிள்யூஎஸ் பிரிவினருக்கு: ரூ.750
- எஸ்சி/ எஸ்டி/ மாற்றுத்திறனாளிகள் பிரிவினருக்கு: இல்லை
விண்ணப்பக் கட்டணத்தை டெபிட், கிரெடிட் கார்டு, நெட் பேங்கிங் அல்லது யுபிஐ மூலம் ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஊதியம் எவ்வளவு?
தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு அடிப்படை ஊதியமாக ரூ.48,480 வழங்கப்படும். இத்துடன் இதர சலுகைகளும் அளிக்கப்படும்.
விண்ணப்பிப்பது எப்படி?
- அதிகாரப்பூர்வ எஸ்பிஐ வலைத்தளமான sbi.co.in-ஐக் காணவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள "Careers" பகுதியைக் கிளிக் செய்யவும்
- SBI CBO 2025 விண்ணப்ப இணைப்பைக் கண்டுபிடித்து கிளிக் செய்யவும்
- உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியுடன் பதிவு செய்யவும்
- உங்கள் கல்வி மற்றும் தனிப்பட்ட விவரங்களை நிரப்பவும்
- தேவையான ஆவணங்களை பதிவேற்றவும் - ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம் மற்றும் கையொப்பம்
- விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தவும்
- படிவத்தைச் சமர்ப்பிக்கவும்.
கூடுதல் தகவல்களுக்கு: sbi.co.in
மேலும் விவரம் அறிய: https://sbi.co.in/web/careers/current-openings
சர்க்கிள் பேஸ்ட் அதிகாரி பணியிடங்களுக்கான முழு அறிவிக்கையை https://sbi.co.in/documents/77530/52947104/CBO+advt+final.pdf/b4d458c6-020e-d611-1814-479c5bad24ac?t=1746728206892 என்ற இணைப்பில் காணலாம்.






















