RPF Recruitment 2024:டிகிரி முடித்தவரா?இரயில்வே துறையில் 4,660 பணியிடங்கள்; இன்று முதல் விண்ணப்பிக்கலாம்?
RPF Recruitment 2024: இரயில்வே துறையில் உள்ள பணியிடங்கள், தகுதித் தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்களை காணலாம்.
நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் உள்ள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது. இதற்கு இன்று (15.04.2024) முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Constable (Executive) - 4208
Sub- Inspector (Ececutive) -452
மொத்த பணியிடங்கள் - 4660
கல்வித் தகுதி:
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு விவரம்:
சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
கான்ஸ்டபிள் பணிக்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
சப் இன்ஸ்பெக்டர் - ரூ.35,400/-
கான்ஸ்டபிள் - ரூ.21,700/-
தெரிவு செய்யப்படும் முறை:
இதற்கு ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, Physcial Measurement test, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யபப்டுவர்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்பிக்கும் முறை:
https://www.rrbchennai.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
இணையதள விவரம்:
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2024
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு கான்ஸ்டபிள் - https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-01-2024/Final%20notice%20Sub%20Inspector%20RPF%2001-2024_English.pdf / சப்-இன்ஸ்பெக்டர் -https://www.rrbchennai.gov.in/downloads/rpf/cen-02-2024/Final%20notice%20Constable%20RPF%2002-2024_English.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..