NIC Recruitment 2023: 598 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!
NIC Recruitment 2023: தேசிய தகவல் மையத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பை இங்கே கீழே காணலாம்.
மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தகவல் மைய (National Informatics Centre) அலுவலகத்தில் உள்ள விஞ்ஞானி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று பார்க்கலாம்.
பணி விவரம்:
- Scientist-‘B’
- Scientific Officer/Engineer – SB
- Scientific/Technical Assistant - ‘A’
மொத்த பணியிடங்கள் - 598
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- Scientist-‘B’ பணியிடத்திற்கு பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தொழில்நுட்ப துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எல்க்ட்ரானிக்ஸ் துறையில் தேர்ச்சி பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- Scientific Officer/Engineer – SB மற்றும் Scientific/Technical Assistant - ‘A’ பணியிடத்திற்கு விண்ணப்பிக்க தொழில்நுட்ப துறையில் M.Sc. /MS/MCA/B.E./B.Tech ஏதாவது ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- இதற்கு விண்ணப்பிக்க பணி அனுபவம் ஏதும் தேவையில்லை என்று அறிவிப்பில் தெர்விக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இது விண்ணப்பிக்க பழங்குடியின / பட்டியலின பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 35 வயது ஆகும். பொதுப்பிரிவினர் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
பொதுப்பணி துறையை சேர்ந்தவர்கள் 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
Scientist-‘B’ Group ‘A’ (Gazetted) | Level-10 ரூ. 56,100- ரூ.1,77,500) |
Scientific Officer/Engineer – SB Group-B (Gazetted) | Level-7 (ரூ. 44,900- ரூ.1,42,400) |
Scientific/Technical Assistant – ‘A’ Group-B (Non-Gazetted) | Level-6 (ரூ. 35,400- ரூ.1,12,400) |
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதள முகவரியான https://www.calicut.nielit.in/nic23/ - என்பதன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்:
பொதுப்பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணமாக ரூ.800 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
பட்டியலின/ பழங்குடியின/ பொதுப்பணி துறை மற்றும் மகளிர் ஆகிய விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி- 04.04.2023
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.calicut.nielit.in/nic23/documentformats/DetailedAdvertisement.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
இதையும் படிங்க..PM Modi degree: பிரதமர் மோடி பி.ஏ. படித்தாரா இல்லையா? அபராதம் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!