மேலும் அறிய

PM Modi degree: பிரதமர் மோடி பி.ஏ. படித்தாரா இல்லையா? அபராதம் விதித்து குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டம் பற்றிய விவரங்கள் வெளியிட தேவையில்லை என கூறிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் குஜராத் நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

பிரதமர் மோடியின் கல்லூரி பட்டம் பற்றிய விவரங்கள் வெளியிட தேவையில்லை என கூறிய நீதிமன்றம், வழக்கு தொடர்ந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. 

மோடியின் கல்வி தகுதி தொடர்பாக சர்ச்சை:

பிரதமர் மோடியின் கல்வி தகுதி தொடர்பாக தொடர் சர்ச்சை நீடித்து வருகிறது. கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுதிறது. ஆனால், அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது. 

இதை தொடர்ந்து, 1978ஆம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்  கோரி இருந்தார்.

ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.

இதுகுறித்து மத்திய தகவல் ஆணையம், கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "வழக்கை விசாரித்ததை தொடர்ந்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை பரிசீலனை செய்யப்பட்டதில், முன்னாள் அல்லது இந்நாள் மாணவரின் கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் பொதுவெளியின் கீழ் வருகிறது. எனவே, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது" என தெரிவித்தது.

மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

வழக்கு தாமதம் :

அதன்பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று கொரோனா பெருந்தொற்று.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பட்டம் தொடர்பான விவரங்களை வெளியிட குஜராத் பல்கலைக்கழகத்திற்கு பிறப்பித்த உத்தரவை குஜராத் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், விவரங்களை கேட்டு வழக்கு தொடர்ந்த அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், "தங்கள் பிரதமர் எவ்வளவு படித்தவர் என்பதை அறிய நாட்டிற்கு உரிமை இல்லையா? அவரது பட்டம் தொடர்பான விவரத்தை வெளிப்படுத்த அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். ஏன்? மேலும் பட்டம் குறித்த விவரங்களை கேட்ட நபருக்கு அபராதம் விதிக்கப்படுமா? என்ன நடக்கிறது? படிக்காத அல்லது குறைவான கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டுக்கு ஆபத்தானவர்"

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!

TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 

”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!

”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!

ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
TVK Vijay: பெண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறி: அரசுக்கு ஐடியா கொடுக்கும் தவெக தலைவர் விஜய் 
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”நாடாளுமன்றத்திற்கு உள்ளே செல்லும் முன் மோடி செய்த சம்பவம்” அதிர்ச்சியில் எதிர்க்கட்சிகள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
”தமிழ்நாட்டையே கூறு போடும் மணல் மும்மூர்த்திகள்” CM பேரை சொல்லி டீல் பேசும் ஆடிட்டர்? கொந்தளிக்கும் கலெக்டர்கள்..!
Senthilbalaji: சீமானுடன் கைகோர்த்த செந்தில் பாலாஜி - திமுகவிற்கு பச்சை துரோகம்? கொந்தளிக்கும் உடன்பிறப்புகள்..!

Aadhav Arjuna : ”விசிக-வை ஆதவ் அர்ஜூனா உடைப்பார்” திமுக கூட்டணி கட்சித் தலைவர் பரபரப்பு பேட்டி..!

Parliament Winter Session: இன்று தொடங்குகிறது நாடாளுமன்ற கூட்டத்தொடர் - அதானி,  மணிப்பூர் - அட்டாக் மோடில் எதிர்க்கட்சிகள்

TN Rain: இன்னைக்கு இருக்கு..! 5 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட், 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை

Embed widget