NABARD: வேலை தேடுகிறீர்களா? நபார்ட் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு; இதை கவனிங்க..
நபார்ட் வங்கியின் வேலைவாய்ப்பு அறிவிப்பு.
தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (National Bank for Agriculture and Rural Development) உள்ள பணிகளுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்.
பணி விவரம்:
உதவி வளர்ச்சி அலுவலர் (Development Assistant)
பணிகளின் எண்ணிக்கை: 177
கல்வித்தகுதி:
அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்தி மற்றும் ஆங்கில பாடத்தை படிக்கும் காலத்தில் படித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இந்த பதவிகளுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.14,650
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ. 450 செலுத்த வேண்டும். பட்டியல் பிரிவு, பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் உள்ளிட்ட பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
எப்படி விண்ணப்பிப்பது:
நபார்ட் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேவையான ஆவணங்களுடன் விண்ணபிக்கலாம்.Village Assistant Jobs: 5ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்; 2,748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் NABARD - National Bank For Agriculture And Rural Development என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பணி குறித்த கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ளவும்.
- பணி தொடர்பாக கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்ள https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/1409225226advertisement-da-2022-eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்யவும்.
- விண்ணப்ப படிவத்தை பெறுவதற்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் https://ibpsonline.ibps.in/nbarddajul22/
விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் - 10
மேலும் வாசிக்க: