மயிலாடுதுறை மாவட்டத்தில் காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்கள் - முழு விபரம் இதோ...!
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமனம் செய்ய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது;
87 சமையல் உதவியாளர் பணியிடங்கள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளிகளில் செயல்பட்டு வரும் சத்துணவு மையங்களில் தற்போது காலியாக உள்ள 87 சமையல் உதவியாளர் பணியிடங்களை நேரடி பணி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. வட்டாரம் வாரியாக நியமிக்கப்பட உள்ள இப்பணியிடங்களின் விபரம், வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இனசுழற்சி அடிப்படையில் தெரிந்து கொள்ளலாம்.
சிறப்பு காலமுறை ஊதியம்
சமையல் உதவியாளராக பணியாற்ற விரும்புவோருக்கு மாத தொகுப்பூதியம் வழங்கப்படும். ஓராண்டு பணி நிறைவு செய்த பின், ஊதிய நிலை 1 (₹3000 - ₹9000) அடிப்படையில் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விரும்பும் பெண்களுக்கான தகுதிகள்
வயது வரம்பு
- பொதுப்பிரிவு மற்றும் தாழ்த்தப்பட்டோர்: 21 முதல் 40 வரை
- பழங்குடியினர்: 18 முதல் 40 வரை
- விதவை / கணவரால் கைவிடப்பட்டோர்: 20 முதல் 40 வரை
கல்வித் தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி
மொழித் திறன்: தமிழில் சரளமாக பேசத் தெரிந்திருக்க வேண்டும்
வசிப்பிடம்: விண்ணப்பிக்கும் சத்துணவு மையத்தில் இருந்து 3 கி.மீ க்குள் இருக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை
விண்ணப்பதாரர்கள், தங்கள் விண்ணப்பங்களை தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அல்லது நகராட்சி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி தேதி: 29.04.2025, மாலை 5.45 மணி வரை
விண்ணப்பத்துடன் பின்வரும் சான்றிதழ்களின் நகல்களை இணைக்க வேண்டும்
- பள்ளி மாற்றுச்சான்றிதழ்
- SSLC மதிப்பெண் சான்றிதழ்
- குடும்ப அட்டை
- இருப்பிடச் சான்று
- ஆதார் அட்டை
- சாதிச்சான்று
- (விருப்பத்திற்கு ஏற்ப) விதவை, மாற்றுத்திறனாளர் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர் சான்றிதழ்கள்
நேர்முகத் தேர்வின் போது அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும். தேர்வுக்கான அழைப்பு, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் நகராட்சி ஆணையர் மூலமாக வழங்கப்படும்.






















