டிகிரி முடிச்சிருக்கீங்களா... என்ன பாஸ் நீங்க: உடனே இந்த போஸ்டிங்குக்கு விண்ணப்பியுங்க
இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம், அரசு விதிகளின்படி, பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.

திருச்சி என்.ஐ.டியில் ஹாஸ்டல் அசிஸ்டென்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிச்சு இருக்காங்க. ஆமாங்க பாஸ். டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க. உங்களுக்கு திறமையும், தகுதியும் இருந்தா வேலை கிடைச்சிடும். தாமதம் பண்ணாதீங்க பாஸ்.
மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான தேசிய தொழில்நுட்ப கழகமான, திருச்சி என்.ஐ.டி.,யில் (NIT) கணக்கு அலுவலர் மற்றும் விடுதி உதவி மேலாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
Accounts Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: M.Com/ ICWA / CA படித்திருக்க வேண்டும். முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
சம்பளம்: ரூ. 50,000
ஹாஸ்டல் அசிஸ்டென்ட் மேனேஜர் (ஆண்கள்)
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். மேலும் ஒரு வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்: இந்தப் பணியிடங்களுக்கான சம்பளம், அரசு விதிகளின்படி, பணியிடங்களுக்கு ஏற்ப வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nitt.edu/home/other/jobs/Advertisement_for_AccountsOfficer_HAM_2025.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்புங்க
முகவரி: The Chief Warden, Hostel Office, NIT Tiruchirappalli- 620015, விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025. இன்னும் என்ன பாஸ் யோசனை. உடனே விண்ணப்பியுங்கள்.






















