Job Alert: பி.எட். தேர்ச்சி பெற்றவரா?ரூ.1.25 லட்சம் ஊதியம்; இலங்கையில் வேலை - முழு விவரம்!
Job Alert: இலங்கையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க இந்தியாவிலிருந்து பி.எட். படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான விவரத்தை காணலாம்.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மூலம் இலங்கையில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஆசிரியர் பயிற்சி அளிக்க்கும் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
Teacher Trainers
EdCIL (இந்தியா) லிமிடெட் நிறுவனம் மூலம் இலங்கையில் பணிபுரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். இதற்கு TGT, PGT ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.
மொத்த பணியிடங்கள் - 50
ஆங்கிலம், கணிதம், உயிரியியல்,வேதியியல் மற்றும் இயற்பியல் உள்ளிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
கல்வித் தகுதி:
- இதற்கு விண்ணப்பிக்க ஆங்கிலம், கணிதம், உயிரியல், இயற்பியல், வேதியியல் போன்ற பாடப்பிரிவுகளில் முதுக்லைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பி.எட். தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும்.
- ஆசிரியராக பணியாற்றி 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
- ஆசிரியர்களுக்கு பயிற்சியளுக்கும் துறையில் குறைந்தது மூன்று ஆண்டுகள் பணி அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.
வயது வரம்பு விவரம்:
இதற்கு விண்ணப்பிக்க மார்ச்,5,2024-யன்று 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.1,25,000/- வழங்கப்படும். பணியில் இருக்கும் மாதங்களுக்கு மெடிக்கல் மற்றும் பயண காப்பீட்டு வழங்கப்படும்.
தங்குமிடம், பயிற்சியளிக்க பள்ளிக்கு செல்வதற்கான பயண வசதிகள் ஏற்படுத்தி தரப்படும்.
பணி காலம்:
இது மூன்று மாதங்களுக்கான பணி என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை மாதம் முதல் பணியில் சேர வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்படுள்ளது.
பணி இடம்:
- கண்டி
- மாத்தளை
- நுவெரெலியா
- இரத்தினபுரி
- கேகாலை
- பதுளை
விண்ணப்பிக்கும் முறை:
https://www.edcilteacherrecruitment.com/- என்ற இணைப்பை க்ளிக் செய்து ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:
நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர். வேலை தொடர்பான தகவல்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.04.2024
வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.edcilteacherrecruitment.com/ExamAdvertisement/Detailed%20advertisement_Sri%20Lanka%20ToT.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
இதழியல் தேர்ச்சி பெற்றவரா? அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை - முழு விவரம்!