Job Alert: நேர்முகத் தேர்வு மட்டுமே; அரசு மருத்துவமனைகளில் 19 வகையான பணி- விண்ணப்பிப்பது எப்படி?
Job Alert: சேலம் மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள ஒப்பந்தம் அடிப்படையிலான வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தற்காலிக வேலைவாய்ப்பு மட்டுமே என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி
- Dispenser (சித்தா)
- Dispenser (ஆயுர்வேதா)
- உதவியாளர் (சித்தார்)
- மாவட்ட திட்ட மேலாளர் (சித்தா)
- தரவு உள்ளீட்டாளர்
- ஆயுஷ் மருத்துவர்
- Therapeutic Assistant (Male -1 & Female -1)
- ஆயுஷ் மருத்துவர் (சித்தா)
- மருத்துவ அதிகாரி
- ஸ்டாஃப் நர்ஸ்
- சுகாதார கண்காணிப்பாளர்
- டேட்டா மேலாளார்
- Psychiatric Social Worker
- Physiotherapist
- Programme Cum Administrative Assistant
- Operation Theatre Assistant
- Radiographer
- பாதுகாவலர்
கல்வித் தகுதி:
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி பணிக்கு கல்வித்தகுதியாக அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் BSMS பட்டப்படிப்ப்பு தேர்ச்சி பெற்றும் Tamil Nadu Dental Council Registration செய்தும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- சித்தா மற்றும் ஆயுர்வேதம் துறை Dispenser பணிக்கு விண்ணப்பிக்க ஃபார்மஸி துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.
- உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- மாவட்ட திட்ட மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க BAMS/BUMS/ BHMS/ BSMS/BNYS ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தரவு உள்ளீட்டாலர் பணிக்கு பி.டெக்., பி.சி.ஏ. பி.பி.ஏ. படித்திருக்க வேண்டும்.
- Therapeutic Assistant பணிக்கு Nursing Therapist படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- செவிலியர் பணிக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- அறுவைச் சிகிச்சை ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க OT Technician படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
- ஆயுஷ் மருத்துவ அதிகாரி - ரு.34,000/-
- Dispenser (சித்தா) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
- Dispenser (ஆயுர்வேதா) - ரூ.750/- (நாள் ஒன்றிற்கு)
- உதவியாளார் (சித்தார்) - ரூ.300/- (நாள் ஒன்றிற்கு)
- மாவட்ட திட்ட மேலாளர் (சித்தா) - ரூ.30,000/-
- தரவு உள்ளீட்டாளர் - ரூ.15,000/-
- ஆயுஷ் மருத்துவர் - ரூ.40,000/-
- Therapeutic Assistant (Male -1 & Female -1) - ரூ.15,000/-
- ஆயுஷ் மருத்துவர் (சித்தா) - ரூ. 40,000/-
- Dispenser (சித்தா) - ரூ.15,000/-
- மருத்துவ அதிகாரி - ரூ.60,000/-
- ஸ்டாஃப் நர்ஸ் - ரூ.18,000/-
- சுகாதார கண்காணிப்பாளர் - 14,000/-
- டேட்டா மேலாளர் - ரூ.20,000/-
- Psychiatric Social Worker - ரூ.18,000/-
- Physiotherapist - ரூ.13,000/-
- Programme Cum Administrative Assistant - ரூ.12,000/-
- Operation Theatre Assistant- ரூ.11,200/-
- Radiographer - ரூ.10,000/-
- பாதுகாவலர் - ரூ.8,500/-
எப்படி விண்ணப்பிப்பது?
பூர்த்தி செய்யப்பட்ட உரிய விண்ணப்பங்களுடன் பணிக்கு தேவையான அறிவிக்கப்பட்ட அனைத்து சுய ஒப்பமிட்ட சான்றிதழ்களின் நகல்களை இணைத்து அஞ்சல் அனுப்ப வேண்டும்.
https://salem.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
தேந்தெடுக்கும் முறை:
இதற்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
நிர்வாக செயலாளர் / மாவட்ட சுகாதாட்ர அலுவலர்
மாவட்ட நல வாழ்வு சங்கம்,
பழைய நாட்டாண்மை கட்டட வளாகம்,
சேலம் - 636 001
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.08.2024
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை அறிய https://cdn.s3waas.gov.in/s3c81e728d9d4c2f636f067f89cc14862c/uploads/2024/08/2024080883.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.