மேலும் அறிய

CPCL Recruitment 2024:டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை!

CPCL Recruitment 2024: டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் பெட்ரோலியம் கார்ப்ரேஷனில் வேலை விண்ணப்பிக்கலாம்.

பொதுத்துறை நிறுவனமான சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (சி.பி.சி.எல்.) நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பொறியாளர் மற்றும் அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தேவையான தகுதிகள் என்னென்ன என்று காணலாம்.

பணி விவரம்

CPCL Recruitment 2024:டிப்ளமோ, பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் - பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை!

கல்வித் தகுதி:

ஜூனியர் / ஜூனியர் பொறியாளர் பணிக்கு கெமிக்கல், பெட்ரோலியம், பெட்ரோகெமிக்கல் ஆகிய துறைகளில் மூன்றாண்டு கால டிப்ளமோ படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதே துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

ஜூனியர் டெக்னிக்கல் உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க 10-வத், 12-வது வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்:

மாத ஊதியமாக  ரூ. 25,000- ரூ.1,05,000/- வழங்கப்படும்..

வயது வரம்பு விவரம்

இதற்கு விண்ணப்பிக்க 26 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பட்டியலின / பழங்குடியின / முன்னாள் ராணுவ வீரர் ஆகியோர் தவிர்த்து மற்ற பிரிவினர் ரூ.500 செலுத்த வேண்டும்.

தெரிவு செய்யப்படும் முறை:

இதற்கு தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, Proficiency/Physical Test, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தெரிவு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பது எப்படி?

https://cpcl-ne24.onlineregistrationform.org/TNCPCL/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணபிக்க கடைசி தேதி - 26.02.2024

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://cpcl.co.in/wp-content/uploads/2024/02/Advertisment-Workmen-2024-Detailed-Final-Version.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கவும்.

தெற்கு ரயில்வேயின் (Southern Railway)  பாலக்காடு, சேலம், அரக்கோணம், ஆவடி, தாம்பரம், ராயபுரம் சென்னை, பொன்மலை, மதுரை, கோயம்புத்தூர், பெரம்பூர், திருவனந்தபுரம்  ஆகிய கோட்டங்களில் ரயில்வே பணிமனைகளில் மாத உதவித்தொகையுடன் இரண்டு ஆண்டுகள் தொழில் பழகுநர் பயிற்சிக்கான (Apprenticeship)  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இதன் மூலம் பெரம்பூரில் உள்ள ரயில்வே மருத்துவமனை ஆய்வகம் மற்றும் பணிமனைகளில் உள்ள எலக்டிரிக்கல், மெக்கானிக்கல் உள்ளிட்ட துறைகளில் உள்ள பதவிகளுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது.

டீசல் மெக்கானிக், எலக்ட்ரிசியன், ஃபிட்டர், எலக்ட்ரானிக் மெக்கானிக், வெல்டர், வயர் மேன், பெயிண்டர், உள்ளிட்ட பணியிடங்களுக்கும், மருத்துவ ஆய்வகத்தில் உள்ள ரேடியாலஜி, இதய மருத்துவம் ஆகிய பிரிவுகளில் ஆய்வக உதவியாளர் ஆகிய துறைகளிலும் பயிற்சி வழங்கப்பட உள்ளது.

பணி விவரம்

Trade Apprentice 

மொத்த பணியிடங்கள் - 2860

கல்வித் தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க 10 + 2 என்ற முறையில் பன்னிரெண்டாம் வகுப்பு , ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பில் 50 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பயிற்சி காலம்

  • ஃபிட்டர்: ஓராண்டு காலம்
  •  வெல்டர் மற்றும் எலக்ட்ரிக் - ஓராண்டு மற்றும் மூன்று மாதங்கள்
  • ஆய்வக தொழில்நுட்ப உதவியாளர் - ஓராண்டு மூன்று மாதங்கள்

வயதுவரம்பு

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு 15 வயது முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். ஐ.டி.ஐ. முடித்தவர்கள் 15 வயது பூர்த்தியடைந்தவர்களாவும்  முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உதவித் தொகை

பயிற்சியின்போது பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் ரூ.6000, ஐ.டி.ஐ. முடித்தவர்களுக்கு மாதம் ரூ.7000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை

பத்தாம் வகுப்பு, ஐ.டி.ஐ. படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பக் கட்டணம்

இந்தத் தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க ரூ.100. செலுத்த வேண்டும். ஆன்லைனில் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும். பழங்குடியின/ பட்டியிலன பிரிவினர் மற்றும் பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான முழு அறிவிப்பினை தெரிந்து கொள்ள https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

கவனிக்க..

  • விண்ணப்பதாரர்கள் செயலில் உள்ள தொடர்பு எண்ணை வழங்குமாறும், இ-மெயில் எண்ணை விண்ணப்ப படிவத்தில் குறிப்பிடும்படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
  • அதிகாரப்பூர்வ வலைதள முகவரியாக www.sr.indianrailways.gov.in -என்ற லிங்கில் கூடுதல் விவரங்களை பெறலாம். இந்தப் பயிற்சியின் மூலம் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படாது என்பதையும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
  • பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ. முடித்தவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள், இளங்கலை பட்டம் அதற்கு மேற்பட்ட கல்வித் தகுதி கொண்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.02.2024

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Honours Students: “படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” -  த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
“படித்தவர்கள் அரசியலுக்கு வரணும்.. நல்ல தலைவர்கள் தேவை” - த.வெ.க., தலைவர் விஜய் பேச்சு!
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
Airtel Recharge: போச்சா..! ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் அதிரடி - ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பு
TVK Vijay: மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
மாணவர்களுக்கு அசத்தலான “மதிய விருந்து” தரப்போகும் விஜய்.. என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Breaking News LIVE: நன்றாகப் படித்தவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்: தவெக தலைவர் விஜய்!
Karnataka Accident: கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
கோயிலுக்கு சென்று திரும்பியபோது விபத்து.. ஒரே கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழப்பு
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Elephant: கூடலூரில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டி - தத்தளித்த வீடியோ
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Latest Gold Silver Rate: தங்கம் விலை உயர்வு; எவ்வளவுன்னு தெரிஞ்சிக்கோங்க!இதோ நிலவரம்!
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Virat Kohli: கலங்காதே ராசா..! உடைந்துபோன கோலி, தேற்றிவிட்ட ராகுல் டிராவிட் - வைரல் வீடியோ
Embed widget