மேலும் அறிய

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

CISF Recruitment 2023 மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 451 பணியிட வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரம்

மத்திய தொழிற்பாதுகாப்புப் படையில் காலியாக உள்ள 451  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. 

கான்ஸ்டபிள் (constable), ஓட்டுநர் பணியிடங்கள் இந்த வேலைவாய்ப்பு மூலம் நிரப்பப்பட உள்ளதாகவும், மேலும் இது தற்காலிக பணி மட்டுமே என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (22.02.2023) கடைசியாகும். 

மத்திய தொழிற்பாதுகாப்பு படை (Central Industrial Security Force) :

இந்தியாவின் முக்கிய தொழிற்நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப்படை தான் மத்திய தொழிற்பாதுகாப்பு படை. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டுவரும் இந்நிறுவனம், முன்னதாக இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி, 2800 படை வீரர்களுடன், மத்திய அரசின் நிறுவனங்களுக்கு மட்டும் பாதுகாப்பு வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இதனையடுத்து 1983ம் ஆண்டு முதல் ஆயுதம் ஏந்தும் உரிமை இந்த வீரர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டிடங்கள், புராதானச் சின்னங்கள் போன்றவைகளைப் பாதுகாக்கும் பொறுப்பில் மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக இங்கு பல்வேறு துறைகளின் கீழ் பலர் பணியாற்றிவரும் நிலையில் தற்போது மத்திய தொழிற்பாதுகாப்பு படையில் உதவி சப் – இன்ஸ்பெக்டர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு பணியிடங்களுக்கு நிகரான தொழிற்கல்வி முடித்திருந்தால் போதும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் வேறு என்ன தகுதி தேவை? என அறிந்துக்கொள்ளலாம்.  Barber, Boot Maker/Cobbler, Tailor, சமையல் செய்பவர், Mason, Mali, Painter, Plumber, Washer Man மற்றும் வெல்டர் ஆகிய பணியிடங்கள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மத்திய தொழிற் பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள்/ ஓட்டுநர் பணிக்கானத் தகுதிகள்:

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

பணி விவரம்:

கான்ஸ்டபிள்

ஓட்டுநர்

பணி இட விவரம்:

தமிழ்நாடு, ஹரியானா, புது டெல்லி, மத்திய பிரதேசம், இராஜஸ்தான், பீகார், புதுச்சேரி, மேற்கு வங்காளம், அசாம், மணிப்பூர், திரிபுரா போன்ற நாடு முழுவதும் மண்டலம் வாரியாக பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி:

அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் பத்தாம் வகுப்பு அல்லது பணியிடத்திற்கு தேவையான தொழிற்கல்வி படித்திருக்க வேண்டும். 

ஓட்டுநர் பணிக்கு விண்னப்பிக்க, ஓட்டுநர் உரிமம் இருப்பது அவசியம். மேலும், மூன்றாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க 21 வயது பூர்த்தியடைந்தவராகவும், 27 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதன் விவரத்தினை கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பின் புகைப்படம் மூலம் தெரிந்து கொள்ளவும்.

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!
 
ஊதிய விவரம்:

 5-வது லெவல் ஊதிய வரைவின் ( Pay Level-3 ) படி  ரூ. 21,700 முதல் 69,100 வரை  வரை ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ’allowances’ வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

உடல்தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் கணினி அடிப்படையிலான எழுத்துத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின், திறனறிவுத் தேர்வு நடத்தபடும். மருத்துவ பரிசோதனை செய்யப்படும்.  எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயார் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

உடல்தகுதித் தேர்வு (physical efficiency test):

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:

உடல் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்படும். தேர்வில் பொது அறிவு, ஆப்டிடியூட் கணிதம் உள்ளிட்டவைகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். வினா தாள் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

டிரேட் டெஸ்ட்:

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

விண்ணப்ப கட்டணம்:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி? 

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளமான  http://www.cisfrectt.in  என்ற லிங்கை கிளிக் செய்து தேவையான கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட  ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.  இந்தப் பணிக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் கட்டணம்- கவனிக்க:

CISF Recruitment 2023 : 451 பணியிடங்கள்; மத்திய அரசுப் பணி; விண்ணப்பிக்க நாளை மறுநாளே கடைசி!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.02.2023 (23.00 மணி வரை)

இது தொடர்பாக கூடுதல் விவரங்கள், விண்ணப்ப படிவம் ஆகியவற்றை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு https://drive.google.com/file/d/1f-SEU2tAymV0jOfZLpoC9c3ut0JFbPgH/view-என்ற இணைப்பை கிளிக் செய்து காணலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget