மேலும் அறிய

BSF Recruitment: மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

BSF Recruitment : எல்லைப் பாதுகாப்பு படையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்கள் பற்றி இங்கே காணலாம்.

எல்லைப் பாதுகாப்பு படையில் ( BORDER SECURITY FORCE ) காலியாக உள்ள தலைமை கான்ஸ்டபிள், உதவி இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் நிரப்பப்பட வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 1526 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளவும்.

இந்திய ராணுவத்தில் ஏதாவது பிரிவில் சேர்ந்துப்பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் இளைஞர்களுக்காகவே தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் பணியாற்றுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய சர்வதேச எல்லைப்பகுதிகளைப்பாதுகாக்கும் மத்திய காவல் ஆயுதப்படைகளில் ஒன்றாக எல்லைப்பாதுகாப்புப் படை இயங்கி வருகிறது.

இந்திய துணை ராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை கடந்த 1965 ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி உருவாக்கப்பட்டது. இதோடு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதுமாக உள்ளது. தற்போது எல்லைப்பாதுகாப்பு படையில் உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க என்னென்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை? குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துகொள்வோம்.

BSF Recruitment: மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

பணி விவரம் 

* Assitant Sub Inspector (Stenographer / Combatant Stenographer) Warrant Officer 

* Head Constable 

* BSF, CRPF,ITBP, CISF, SSB, AR உள்ளிட்ட பிரிவுகளுக்கு இந்த வேலைவாய்ப்பு மூலம் தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர்.

கல்வித் தகுதி

இதற்கு விண்ணப்பிக்க 10+2 என்ற முறையில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பணிக்கு விண்ணப்பிக்கும் கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், https://rectt.bsf.gov.in/#bsf-current-openings- என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

இந்தப் பணிக்கு  7th CPC  Pay Matrix Level-3, -ன்படி  மாத ஊதியமாக ரூ.21,700- 92,300/- வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

BSF Recruitment: மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

விண்ணப்பக் கட்டணம்:

இப்பணியிடங்களுக்கு அனைத்து வகுப்பைச்சேர்ந்த பெண்கள், பட்டியலின்/ பழங்குடியின பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மற்ற பிரிவினர் இணையவழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

வயது வரம்பு:

இதற்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவர்களாகவும், 25 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். 

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முதலில் ஆப்லைன் எழுத்துத்தேர்வு நடைபெறும். பின்னர் உடல் தகுதி தேர்வு  மற்றும் மருத்துவ தகுதி தேர்வுகளில் தேர்ச்சிபெற்ற வேண்டும்.  இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்விற்கு அழைக்கப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் தேர்வு பாடத்திட்டம்

BSF Recruitment: மத்திய அரசுப்பணி, ரூ.92 ஆயிரம் ஊதியம்- 1,526 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்- எப்படி?

எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயன்பெறுங்கள். மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விவரங்களை https://rectt.bsf.gov.in/static/bsf/pdf/234fb396-0d25-11ef-ba98-0a050616f7db.pdf?rel=2024060301 -என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.7.2024 , 11.59 மணி வரை 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Sabarimala Temple: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு... சபரிமலையில் ஸ்பாட் புக்கிங் திடீர் நிறுத்தம்
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
Breaking News LIVE: சிசிடிவி காட்சிகளை வெளியிட மறுப்பது ஏன்? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
TN GOVT Election: என்னாது..!  உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
TN GOVT Election: என்னாது..! உள்ளாட்சி தேர்தல் கிடையாது - தமிழ்நாடு அரசு அறிவிப்பு
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து  வழக்கு...என்ன சொன்னாங்க
விசாரணைக்கு வந்த ஜெயம் ரவி ஆர்த்தி விவாகரத்து வழக்கு...என்ன சொன்னாங்க
Embed widget