ஒரு டிகிரி இருக்கா? தேசிய மின்னணு மற்றும் தகவல்தொடர்பு மையத்தில் குவியும் வேலைவாய்ப்புகள்
விண்ணப்பதாரர்களுக்கு ஸ்கிரீனிங் தேர்வு, தனிப்பட்ட தொடர்பு தேர்வு,நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள். மாதம் ரூ. 67 700 முதல் ரூ.2,09,200 என நிர்ணயம்.
தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் காலியாக உள்ள 33 விஞ்ஞானி சி மற்றும் விஞ்ஞானி டி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வருகின்ற டிசம்பர் 7-ஆம் தேதிக்குள் விண்ணப்பித்துக்கொள்ளவும்.
மத்திய அரசு தொழில் நிறுவனமாக தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையம் செயல்பட்டுவருகிறது. முன்னதாக DOEACC Society என்ற பெயருடன் இயங்கிவந்தது. இதன் மூலம் பல்வேறு நிலைகளில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மின்னணுவியல் பயிற்சி பலருக்கு வழங்கப்பட்டுவரும் நிலையில் இந்த மையம் மத்திய அரசாங்கத்தின் தன்னாட்சி பெற்ற ஒரு சட்டப்பூர்வமாக செயல்பட்டுவருகிறது.
குறிப்பாக சிபிஎஸ்சி, யுஜிசி போன்ற நிறுவனங்களைப்போலவே இதற்கும் அதே போன்ற அதிகாரம் உள்ளது. இந்தியா முழுவதும் NIELIT உடன் இணைக்கப்பட்டு கணினி/IT கல்வித் துறையில் வகுப்புகளை நடத்தும் பல கணினி நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசு நிறுவனமான இதில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு காலிப்பணியிட அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகும் நிலையில் தற்போது டெல்லியில் உள்ள தேசிய மின்னணு மற்றும் தகவல் தொடர்பு மையத்தில் விஞ்ஞானி சி மற்றும் விஞ்ஞானி டி பிரிவில் 33 இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பணிக்கு இந்தியா முழுவதும் உள்ள இளைஞர்கள் யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்நேரத்தில் வேறு என்ன தகுதிகள்? விண்ணப்பிக்கும் முறை ? குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
என்.ஐ.இ.எல்.ஐ.டி பணிக்கானத் தகுதிகள்
காலிப்பணியிடங்கள் : 33
கல்வித்தகுதி : பொறியியல் அல்லது தொழில்நுட்பம் துறையில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதோடு ஆராய்ச்சி மற்றும் விரிவாக்கப்பணிகளில் 4 ஆண்டுகள் வரை பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 35 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், https://recruitment-delhi.nielit.gov.in என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் ஆன்லைன் மூலம் டிசம்பர் 7 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்
பொதுப்பிரிவினருக்கு ரூ. 800-உம், எஸ்.சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 400 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
தேர்வு முறை
விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களுக்கு ஸ்கிரீனிங் தேர்வு, தனிப்பட்ட தொடர்பு தேர்வு,நேர்முகத்தேர்வு நடத்தப்படும். இதில் தேர்வாகும் நபர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள்.
சம்பளம் – மாதம் ரூ. 67 700 முதல் ரூ.2,09,200 என நிர்ணயம்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://recruitment-delhi.nielit.gov.in/PDF/MeitY/Detailed_Advt_Scientit_C_and_D.pdf என்ற இணையதளப்பக்கத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.